பான் இந்தியா ஆங்கர் ‘டிடி‘..ஆலியா பட் கணவருடன் நெருக்கமாக செல்பி!

சென்னை : தமிழ் சின்னத்திரையில் அதிகம் விரும்பப்படும் மற்றும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.

கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் அவரது ஸ்டைலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பக்கா எண்டெர்டெய்னரான டிடிக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி பிரபலங்களுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ளார் டிடி.

தற்போது ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூருடன் நெருக்கமாக செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஆஸ்தான தொகுப்பாளினி டிடி

ஆஸ்தான தொகுப்பாளினி டிடி

விஜய் ஆஸ்தான தொகுப்பாளியான டிடி, தொகுப்பாளராக மட்டுமின்றி நடிகையாகவும் உள்ளார். விசில், பா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.

ஷாருக்கானை கட்டிப்பிடித்து

ஷாருக்கானை கட்டிப்பிடித்து

டிடி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள டிடி அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானை கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை ஷேர் செய்திருந்தார். நயன்தாராவின் குளோஸ் தோழியான டிடி, விக்கி - நயன் கல்யாணத்தில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக் கானை "நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல நினைத்த அனைத்தையும் அவரிடம் சொன்னேன் என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.

ரன்பீர் கபூருடன் செல்பி

ரன்பீர் கபூருடன் செல்பி

ரன்பீர் கபூர் ஷாம்ஷரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம், ஜூலை 22ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தை, கரண் மல்ஹோத்ரா இயக்கி உள்ளார். இந்த படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி ரன்பீர் கபூருடன் நெருக்கமாக செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara – Vignesh Shivan திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள் #Celebrity | Filmibeat Tamil
மகிழ்ச்சியான தகவல்

மகிழ்ச்சியான தகவல்

ரன்பீர் கபூர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட் கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை கடந்த மாதம் தம்பதிகள் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியாக அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X