இன்னொரு நயன்தாராவ இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே.. தொகுப்பாளினியின் போட்டோவை பார்த்து பீலாகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை இன்னொரு நயன்தாரா என புகழ்ந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. விஜய் டிவி புராடெக்ட்டான இவர், உள்ளூர் பிரபலங்கள் முதல் வட கான் நடிகர்கள் வரை பலரையும் நேர்காணல் செய்துவிட்டார்.
ஏராளமான விருது விழாக்களையும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அவரது கலகலப்பான பேச்சை ரசிக்கவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

அடிக்கடி செய்திகள்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக விவாகரத்துக்கு பிறகு அவரது பெயர் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறது.

விவாகரத்து
தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான உதவி இயக்குநர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் செய்தார்.

காரணம்
இரவு நேர பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் அவர் குடித்துவிட்டு போட்ட கும்மாளம்தான் விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது. தொடர்ந்து இரவு நேர பார்ட்டியில் அவர் பங்கேற்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

விளாசும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் அண்மையில் டிடி பிகினியில் தனது சகோதரருடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளினர்.

கறுப்பு நிற டாப்ஸ்
இந்நிலையில் டிடி தற்போது மேலும் ஒரு ஹாட்டான போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் தொடை வரை மட்டுமே உள்ள கறுப்பு நிற டாப்ஸை அணிந்துள்ளார்.

வாவ்.. க்யூட்..
மேலும் அந்த டாப்ஸ்க்கு மேல் ஒரு ஓவர் கோட்டை ஃபிரிஹேர் கூலிங் கிளாஸ் என ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார். அவரது அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வாவ்.. க்யூட்.. என ஜொள்ளு விட்டுள்ளனர்.

மிஸ் பண்ணிடுச்சே..
மேலும் சிலர் இன்னொரு நயன்தாராவ இப்படி அநியாயத்துக்கு இந்த தமிழ் சினிமா மிஸ் பண்ணிடுச்சே என ஃபீல் பண்ணியிருக்கின்றனர். மேலும் சிலர் ஹாட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குறீங்களே என புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

அழகான ஓவியம்
மேலும் சிலர் நீங்கள் ஒரு அழகான ஓவியம் என்றும் தெரிவித்து வருகின்றனர். டிடியின் இந்த கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











