பாத்துட்டேன், நான் பாத்துட்டேன்: துள்ளிக் குதிக்கும் டிடி
சென்னை: 2.0 டீஸரை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மகிழ்ச்சியில் உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 பட டீஸர் இன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்துவிட்டார்.
இந்நிலையில் டீஸரை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி செம குஷியில் உள்ளார்.
டிடி
என் தலைவரை பெரிய ஸ்கிரீன்ல 3டில பாத்துட்டேன்... அருமை ஷங்கர் சார்...என்று பயங்கர மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி #2point0teaser. அவரின் ட்வீட்டை பார்த்தவர்கள் நல்லா ஐஸ் வைக்கிறீர்கள் டிடி என்று கிண்டல் செய்துள்ளார்கள்.
அமைதி
விக்ரம் பிரபு அவர் வழியில் வார்த்தை எதுவும் இல்லாமல் பாராட்டியுள்ளார்.
பாராட்டு
2.0 டீஸரை பார்த்த தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஷங்கர், ரஜினி, அக்ஷய் குமார் ஆகியோரை பாராட்டியுள்ளார். ஹாலிவுட் ஸ்டைலுக்கு இருப்பதாக பெருமிதம் கொண்டுள்ளார்.

ட்வீட் இல்லை
ரஜினியின் பட டீஸர் வெளியாகியுள்ளது. அப்படி இருந்தும் பல பிரபலங்கள் அது குறித்து எதுவும் ட்வீட்டவில்லை. நம்ம சங்க தலைவர் விஷால் மற்ற விஷயங்கள் பற்றி ட்வீட்டியிருக்கிறார் ஆனால் ரஜினியை மறந்துவிட்டாரே. ஒரு வேளை விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைவரும் பிசியாக இருக்கிறார்களோ?. அட, மாப்பிள்ளை தனுஷ் கூட ட்வீட்டவில்லையே.


Click it and Unblock the Notifications











