பச்சை வண்ண பூவே டிடி.. மனசை அள்ளும் போட்டோக்கள்!
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மத்தியில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய ரெக்கை கட்டிய மனசு என்ற சின்னத்திரை சீரியலில் நடிகையாக கால் பதித்தார் டிடி. இதில் அவரின் நடிப்பை பார்த்து அதற்கு பின் பல சீரியல் வாய்ப்பு தேடி வந்தன.

பாலச்சந்தரின் சீரியல்க்கு பிறகு கமல்ஹாசன் தயாரித்து மாதவன் நடித்த நள தமயந்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிடி. இதன் பின் பல படங்களில் சிறு வேடத்தில் நடித்த டிடி மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

சீரியல்களில் நடிக்க துவங்கிய டிடி அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரை மக்களின் மனதில் கொண்டு சென்ற கதாபாத்திரங்களே.
குறிப்பாக ராதிகா சரத்குமார் தயாரித்த செல்வி மற்றும் அரசி சீரியல்களில் மிகவும் பிரபலமானவை.
இவர் ஒரு வாய்ஸ் ஆடிஸ்ட்டும் கூட வெங்கட் பிரபு இயக்கிய சரேஜா மற்றும் கோவா படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். பின் தமிழ் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளினியாக மாறினார் டிடி.

இவர் தொகுத்து வழங்கிய காபி வித்து டிடி நிகழ்ச்சி மிகவும் பேசப்பட்டது. மற்றும் ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கியது டிடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது இவரின் வழக்கம். தற்போது கூட பச்சை நிற ஆடையில் பல விதமாக போஸ் கொடுத்துள்ளார் டிடி. இதனை பார்க்கையில் பச்சை வண்ண பூவே டிடி என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











