டிடி வீட்டில் விசேஷம்.. ஓடி வந்து வாழ்த்திய பிரபலங்கள்.. களைகட்டிய ரிசப்ஷன்!

சென்னை: ரசிகர்களின் மனதை வென்ற தொகுப்பாளினி என்றால் அது 'டிடி' என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்து எடுக்கிறார். திவ்யதர்ஷினியை ரசிகர்கள் செல்லமாக 'டிடி' என அழைத்து வருகின்றனர். எந்த நடிகர், நடிகை பிரபலமாக இருந்தாலும், அவர்களை ஈசியாக அணுகி அவர்களின் மனதை வென்று விடக்கூடிய திறமை 'டிடி' இடம் இருக்கிறது. தற்போது 'டிடி' வீட்டில் விசேஷம் நடந்துள்ளது அந்த விசேஷத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் 'காபி வித் டிடி' என்கிற நிகழ்ச்சிக்கு தொகுத்து வழங்கிய பிரபலமான டிடி. தற்போது முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள், ஸ்டார் நடிகர்களின் இசை வெளியீட்டு விழா என மிகவும் அறிதான நிகழ்ச்சிகளில் தலை காட்டில் வருகிறார். ஆனால், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான வீடியோக்கள், போட்டோக்கள் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Dhivyadharshini Priyadharshini
Photo Credit:

தம்பியின் ரிசப்ஷன் போட்டோ: அந்த வகையில் டிடி தனது இன்ஸ்டாகிராமில், தனது தம்பியின் திருமண போட்டோவை பகிர்ந்து இருந்தார். அதில், எங்கள் தம்பி தர்ஷனுக்கும் அஜாருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. எங்கள் அழகான அஜாராவை எங்கள் வீட்டிற்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும், கிர்கிஸ்தானிலிருந்து எங்கள் குடும்பத்தில் இணைந்து இருக்கும் உங்கள் குடும்பத்தை வரவேற்கிறோம் என பதிவிட்டு இருந்தார். பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Dhivyadharshini Priyadharshini
Photo Credit:

இதையடுத்து, தம்பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று தடபுடலாக நடைபெற்றுள்ளது. அந்த ரிசப்ஷன் போட்டோவை டிடியின் அக்கா பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரியதர்ஷினி சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா என்கிற ரோலில் நடித்து வரும் நிலையில், அந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் பார்வதி வெங்கட்டராமன், ஹரிப்பிரியா, காயத்ரி ராஜா, ராஜி ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X