அரபு நாட்டில் இருந்தபடி அரபிக் குத்து போட்ட டிடி நீலகண்டன்.. சும்மா லைக்ஸ் அள்ளுது!

சென்னை: பிரபல டிவி தொகுப்பாளினி டிடி நீலகண்டன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

60 மில்லியனை கடந்து நான் ஸ்டாப்பாக டிரெண்டாகி வரும் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர்.

பூஜா ஹெக்டே, சமந்தா, அபர்ணா தாஸ், அஞ்சனா ரங்கன், அனிருத் என பல பிரபலங்கள் நடனமாடி உள்ள நிலையில், நம்ம டிடியும் தன் பங்கிற்கு ஒரு செம குத்தாட்டத்தை போட்டுள்ளார்.

தூபாய் டூர்

தூபாய் டூர்

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா சென்று வந்த டிடி எனும் திவ்யதர்ஷினி தற்போது துபாயில் டூர் அடித்து வருகிறார். கடைசியாக விஜய் டிவியில் ஆர்.ஆர்.ஆர் புரமோஷனுக்காக இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை பேட்டி எடுத்திருந்தார். சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை தனியாக மகான் படத்திற்காக பேட்டி எடுத்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து ஜாலி டூர் செய்து வருகிறார் டிடி.

டூர் வீடியோக்கள்

டூர் வீடியோக்கள்

துபாய் நகரை சுற்றிப் பார்த்து வரும் டிடி அங்கே எடுக்கும் ஏகப்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். பெரிய காரில் கலக்கலாக இறங்கும் வீடியோ, துபாயின் சுற்றுலா தளங்களுக்கு முன்னதாக நின்று கொண்டு நடனம் ஆடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இது துபாய் குத்து

இது துபாய் குத்து

அரபிக் குத்து பாடலை அரபு நாட்டில் இருந்து கொண்டு ஆடாமல் இருந்தால் எப்படி என பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலுக்கு டிடி நீலகண்டன் நடனமாடிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளி உள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

பூஜா, சமந்தா அளவுக்கு இல்லை

பூஜா, சமந்தா அளவுக்கு இல்லை

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் நடனமாடி வரும் நிலையில், தன்னுடைய நடன வீடியோவை போட்டுள்ள டிடி பூஜா ஹெக்டே, சமந்தா அளவுக்குலாம் நான் ஆட மாட்டேன் என உஷாராக சூப்பர் கேப்ஷன் போட்டு விட்டு, ஆனாலும், துபாயில் இருந்து கொண்டு அரபிக் குத்து பாட்டுக்கு ஆடாமல் இருந்தால் நல்லா இருக்காதுங்க என தனது ஆட்டத்தை போட்டுள்ளார். பிரியங்கா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூப்பராக இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X