அதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை.. மாகாபா ஆனந்த் பிறந்தநாளில் செம குத்தாட்டம் போட்ட டிடி!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்தின் 35வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட டிடி நீலகண்டன் செம குத்தாட்டம் போட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மாகாபா ஆனந்த் மற்றும் டிடி நீலகண்டன் நீண்ட நாட்களாக நண்பர்களாக உள்ள நிலையில், மாகாபா ஆனந்த் பிறந்தநாள் பார்ட்டியில் டிடி கலந்து கொண்டார்.
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக திருமண விழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களிலேயே அதிகமானோர் கலந்து கொள்ளக் கூடாது என அறிவித்துள்ள நிலையில், பிறந்தநாள் பார்ட்டி எல்லாம் எப்படி பண்றீங்க? என ஒரு பக்கம் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மாகாபா பர்த்டே பார்ட்டி
1986ம் ஆண்டு மே 20ம் தேதி புதுச்சேரியில் பிறந்த மாகாபா ஆனந்த் நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன் கலந்து கொண்டார். பிறந்தநாள் பார்ட்டியில் மாகாபாவுடன் எடுத்துக் கொண்ட சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் டிடி போஸ்ட் செய்து வைரலாக்கி உள்ளார்.

டிடி குத்தாட்டம்
மாகாபா ஆனந்த் உடன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட டிடி நீலகண்டன் அவருடன் செம குத்தாட்டம் போட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு மாகாபா ஆனந்தை வாழ்த்தி உள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

அதை பத்தி கவலை இல்லை
மாகாபா ஆனந்தின் பர்த்டே பார்ட்டியில் அவருடன் நடனமாடிய டிடி அந்த போட்டோக்களை பதிவிட்டு, "அந்த டான்ஸ் ஃப்ளோர்ல யாரும் இல்லை. ஆனால், அதை பத்தி எங்களுக்கு கவலை இல்லை.. தட்ஸ் மாகாபா ஃபார் யூ.. மாகாபா என் டார்லிங்.. லைஃப்ல எவ்ளோ பிரச்சனை வந்தாலும் இந்த மாதிரி டான்ஸ் ஆடிட்டே இருப்போம்" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
மாகாபா ஆனந்தின் தனது 35வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டிடி தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், சூப்பர் போஸ்ட் என்றும் நல்ல நண்பர்கள் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

மாஸ்க் எங்கே
மாகாபா ஆனந்தின் பிறந்தநாள் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர், யாருமே மாஸ்க் போடல, இந்த கொரோனா பரவல் காலத்தில் எப்படி இப்படியொரு பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடுறீங்க என ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு டிடியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தனுஷ்னு நினைச்சிட்டேன்
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி நீலகண்டன் கருப்பு வெள்ளையில் போட்ட முதல் போட்டோவை பார்த்த ரசிகர்கள், மாகாபா ஆனந்தை தனுஷ் என நினைத்து விட்டதாக கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். டிடியின் தீவிர ரசிகர்கள், க்யூட் அக்கா என்றும் செம போஸ்ட் என்றும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். பர்த்டே கேக் எங்க அக்கா விக்கிறாங்க இந்த லாக்டவுன்ல என்றும் சிலர் கேட்டு கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











