ஷ்ருதி ஹாசனுக்கு தங்கையான டிடி.. எந்த படத்தில் தெரியுமா?

Recommended Video

டிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷ்ருதியுடன் டிடி...!

சென்னை: டிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 படத்திற்கான இந்திய புரமோஷன்கள் அசுர வேகத்தில் நடக்கிறது.

நவம்பர் 22ம் தேதி வெளியாகவுள்ள துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மாவுக்கு கூட இத்தனை களேபரங்கள் இல்லை.

DD Neelakandan lend her voice to Anna Character

தமிழில் எல்சாவாக ஷ்ருதி ஹாசன் குரல் கொடுத்துள்ள நிலையில், ஆன்னாவாக விஜய் டிவி புகழ் டிடி எனும் திவ்ய தர்ஷினி குரல் கொடுத்துள்ளார்.

மேலும், காமெடி நடிகர் சத்யன் ஒலாஃப் எனும் பனி மனிதனுக்கு குரல் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் எல்சா கதாபாத்திரத்திற்கு பிரியங்கா சோப்ராவும் ஆன்னா கதாபாத்திரத்திற்கு அவரது தங்கை பரிணித்தி சோப்ராவும் குரல் கொடுத்துள்ளனர்.

தமிழில் அதே போல, ஷ்ருதி ஹாசனும் அவரது தங்கை அக்‌ஷரா ஹாசனும் குரல் கொடுப்பார்களா என்று எதிர்பார்த்த நிலையில், பிரபல ஆன்னா கதாபாத்திரத்திற்கு விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி குரல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை வால்ட் டிஸ்னி ஸ்டூடியோஸ் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் இளம் வயது எல்சா மற்றும் ஆன்னா கதாபாத்திரங்களுக்கு யார் குரல் கொடுக்க உள்ளனர் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தெலுங்கில் இளம் வயது எல்சா கதாபாத்திரத்திற்கு மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா குரல் கொடுத்துள்ளார்.

ஃப்ரோஸன் 2 இரண்டாம் பாகத்தில் பிறவியிலேயே எல்சாவுக்கு எப்படி தொட்டதை எல்லாம் உறைய வைக்கும் சக்தி கிடைத்தது என்ற மூல கதை படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜெனிஃபர் லீ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X