DD Neelakandan: ’லியோ’ அன்பெனும் ஆயுதம் பாட்டுக்கு ரீல்ஸ் போட்ட டிடி நீலகண்டன்.. எவ்ளோ க்யூட்!
சென்னை: டிடி நீலகண்டன் ஆல் டைம் சினிமா லவ்வர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிலும், விஜய் படங்கள் வெளியாகும் போது தான் ஒரு தீவிரமான விஜய் ரசிகை என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார். இந்நிலையில், தற்போது அனைவரும் லியோவில் கரு கரு கருப்பாயி பாடலுக்கு ரீல்ஸ் போட்டு வரும் நிலையில், அழகாக அன்பெனும் ஆயுதம் பாடலுக்கு ரீல்ஸ் போட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி நீலகண்டன் தனது வாழ்க்கையில் விவாகரத்து, காலில் பிரச்சனை என பல கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தனது சிம்பிளான புன்னகையால் கடந்து பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள டிடி நீலகண்டன் அந்த படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார்.
கரு கரு கருப்பாயி: லியோ படத்தில் விஜய் நடனமாடும் கரு கரு கருப்பாயி பாடலுக்கு பிக் பாஸ் தனலட்சுமி உள்ளிட்ட பல பெண்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு டிடி நீலகண்டன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதும் அந்த பாடலுக்குத்தானா என நினைத்த ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் கொடுத்துள்ளார் டிடி நீலகண்டன்.
டிடி நீலகண்டன்: லியோ படத்தின் இன்ட்ரோ பாடலான அன்பெனும் ஆயுதம் பாடலுக்கு தற்போது செம அழகாகவும் க்யூட்டாகவும் ரீல்ஸ் போட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் டிடி நீலகண்டன். சினிமா பிரபலங்கள் மற்றும் டிடி நீலகண்டனின் ரசிகர்கள் லைக் போட்டு ஏகப்பட்ட கமெண்ட்டுகளில் சூப்பர் டிடி என பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் அர்ச்சனா கமெண்ட்: Slaying it like a diva என பிக் பாஸ் அர்ச்சனா சக தொகுப்பாளினியான டிடி நீலகண்டன் கருப்பு சேலையில் கலக்கலாக லியோ பாடலுக்கு ரீல் போட்டிருப்பதை பார்த்து பாராட்டி உள்ளார். மேலும், பல கமெண்ட்டுகள் டிடி நீலகண்டனின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











