DD Next Level Blue Sattai Maran Review: ப்ளூ சட்டை மாறனிடம் சந்தானம் வாங்கிய மார்க்? விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், யாஷிகா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி நேற்று அதாவது மே 16ஆம் தேதி வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். படம் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக எடுத்துள்ளார்கள். படம் எப்படி உள்ளது என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இது ஒரு பேய் படம். பேய் படம் என்றாலே ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு பங்களா இருக்கும். அங்கு தேவை இருக்கிறதோ, தேவை இல்லையோ நான்கு பேர் அங்கு போவார்கள். அங்கு இருக்கும் பேய் அவர்களை பாடாய்ப்படுத்தும். அந்த பேய்க்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும், அது என்ன? , அதன் பின்னர் அந்த பேயிடம் இருந்து தப்பித்து வந்தார்களா இல்லையா என்பதுதான் கதையாக இருக்கும்.
இந்த படத்தின் கதையும் இதுதான். ஆனால் இந்த படத்தில் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துள்ளார்கள். அது என்னவென்றால் படத்தில் கதாநாயகன் மொக்கை படங்களை அடித்து துவைத்து விமர்சனம் செய்யும் ரிவ்யூவர். இப்படியான ரிவ்யூவர்களை பழிவாங்க காத்துக் கிடக்கும் பேய். கதாநாயகனையும் அவரது குடும்பத்தையும் தந்திரமாக தியேட்டருக்கு வர வைக்கும் பேய், அங்கு ஓடும் படத்திற்குள் அவர்களை தள்ளி விட்டு விடுகிறது.

கதை: அந்த படத்திற்குள் ஒரு பேய் உள்ளது. அந்த பேயிடம் இருந்து தப்பித்து வந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. கதையாக இந்த படம் தொடங்கப்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. படத்தை தொடங்கிய கோணத்திலேயே படத்தைக் கொண்டு போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் படத்தில் இருக்கும் பேய் கதாநாயகனை ஒரு படத்திற்குள் தள்ளி விட்டு விடுகிறது. அந்த சினிமா வழக்கமான சினிமா.
டெக்னிக்கல்: தமிழ் சினிமாவில், சினிமாவிற்குள் சினிமா என்று எடுத்த படங்கள் ஓடியதில்லை. ஆனால் சினிமாவிற்குள் நடக்கும் டெக்னிக்கலான விஷயங்களை வைத்து ஜோக் அடிக்கிறார்கள். அந்த ஜோக் சினிமாவில் இருப்பவகளுக்கு புரிகிறது, ரசிக்கும் படியாகவும் உள்ளது. ஆனால், வெகுஜன மக்களுக்கு அது எப்படி புரியும்? முந்தைய படமான டிடி ரிட்டன்ஸ் படம் காமெடி மற்றும் ஹாரர் படமான இருந்தாலும் படத்தில் முடிந்த அளவுக்கு லாஜிக்குடன் எடுத்திருப்பார்கள். கதாபாத்திரங்களும் சிறப்பாகவே வடிவமைத்திருப்பார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கும்.

காமெடிகள்: இந்த படத்தில் மெயின் கதாபாத்திரமான சந்தானமே காமெடி செய்யவில்லை. அவரது கதாபாத்திரம் சிறப்பாக கட்டமைக்கப்பட வில்லை. பேய் கதாபாத்திரமாக வரும் செல்வராகவன் கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்க வில்லை. இப்படியான நிலையில் என்னென்னமோ காமெடி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் நமக்கு சிரிப்புதான் வரவில்லை. மொட்டை ராஜேந்திரன், மாறன், கிங்ஸ்லி செய்யும் காமெடிகள் சில நன்றாக உள்ளது. படத்தில் டெக்னிக்கலாகவும் மேக்கிங்காகவும் நன்றாக உள்ளது. படம் இடம் பெற்ற கிஸ்ஸா பாடல் நன்றாக இருந்தது. அதனை முழுவதுமாக இடம் பெறச் செய்திருக்கலாம். குபீர் சிரிப்பு வரவழைக்கும் காமெடி காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











