DD Next Level Public Review: சந்தானத்தை நம்பி வந்ததுக்கு.. டிடி நெக்ஸ்ட் லெவல் பப்ளிக் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இன்று அதாவது மே 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள இந்த படத்தின் பொதுமக்கள் விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகர் ஒருவர் கூறும்போது, " படத்தில் மெசேஜ் எல்லாம் எதுவும் இல்லை. படங்களை விமர்சனம் செய்வதை ஒரு படத்தின் கண்டெண்ட்டாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார்கள். காமெடியாக நன்றாக உள்ளது. படத்தில் எல்லாம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், படத்தை ஹாரர் என்பதைக் காட்டிலும் காமெடிதான் படம் முழுக்க உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

DD Next Level Public Review Santhanam And Mottai Rajendran Comedy Works Well

அதேபோல் மற்றொரு ரசிகை கூறும்போது, " படம் ரொம்ப நன்றாக உள்ளது. காமெடியாக உள்ளது. படம் குழந்தைகளுக்கு மிகவும் நன்றாகவே கனெக்ட் ஆகும். பெரியவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு படம் நன்றாக இருக்கும். படத்தில் எனக்கு மொட்டை ராஜேந்திரன் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. இதை பேய் படம் என்று எதிர்பார்த்து படத்தை பார்க்க வந்தால் படம் உங்களுக்கு பிடிக்காது. இதற்கு முன்னர் வந்த டிடி படங்களைப் போல் இல்லாமல், விமர்சனப் படமாக உள்ளது. தமிழ் சினிமா விமர்சகர்களை போட்டு கலாய்த்து தள்ளி உள்ளார்கள். ஆனால் அது பார்க்க நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சந்தானத்தை நம்பியதுக்கு: அதேபோல் மற்றொரு ரசிகை கூறும்போது, " படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காமெடியாக நன்றாக இருந்தது. சந்தானத்தின் காமெடி நன்றாக உள்ளது. சந்தானத்தை நம்பி படத்திற்கு வந்ததற்கு நன்றாக சிரிக்க வைத்துவிட்டார். பேய் படம் என்றாலும் பயப்படும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. ஆனால் படம் குழந்தைகளோடு பார்க்கும் அளவுக்கு மிகவும் காமெடியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

படம் என்ன சொல்லுது: மற்றொரு ரசிகர் கூறும்போது, " சிலர் படம் பார்க்காமலே விமர்சனம் செய்கிறார்கள். இதனால் படம் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். படம் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாம். எல்லா காமெடியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் வரும் உயிரே உயிரே பாடலும் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

DD Next Level Public Review Santhanam And Mottai Rajendran Comedy Works Well

அரண்மனை மாதிரி: " படத்தில் ஹாரர் மற்றும் காமெடி என இரண்டுமே ஒன்றாக எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆனால் அது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தை ஒருமுறை பார்க்கலாம். அரண்மனை படத்தை எப்படி பார்ட் பார்ட்டாக எடுக்கிறார்களோ, அதேபோல் இந்த படத்தை பார்ட் பார்ட்டாக எடுக்கிறார்கள். படம் நன்றாக இருந்து விமர்சகர்கள் படம் நன்றாக இல்லை என்று கூறினாலும் படம் ஓடுவதைத் தடுக்க முடியாது. அதேபோல் படம் நன்றாக இல்லை என்றால், விமர்சகர்கள் படத்தை நன்றாக உள்ளது என்று கூறினால், படம் ஓட போவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X