பவர் பாண்டியில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தனுஷ்... நினைவுகளை பகிர்ந்த டிடி!

சென்னை : நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்தில் விஜய் டிவி புகழ் டிடி சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு கிடைத்த சான்ஸ் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் திவ்யதர்ஷினி.

விஜய் டிவி தொகுப்பாளர்

விஜய் டிவி தொகுப்பாளர்

விஜய் டிவியின் சிறப்பான தொகுப்பாளராக விளங்கி வருகிறார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. அந்த டிவியின் முக்கியமான பல விஐபிக்களை பேட்டி எடுப்பதாகட்டும், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஸ்பீட் கெட் செட் கோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளாகட்டும் தான் செய்யும் நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து வருகிறார் டிடி.

முன்னணி நடிகர்களுடன் பேட்டி

முன்னணி நடிகர்களுடன் பேட்டி

பல முன்னணி நடிகர்களையும் இவர் விஜய் டிவிக்காக பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் ஆர்ஆர்ஆர் குழுவினரை பேட்டி எடுத்தது அனைவரையும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணை இவர் பேட்டி எடுத்திருந்தார்.

விருது நிகழ்ச்சிகள் தொகுப்பு

விருது நிகழ்ச்சிகள் தொகுப்பு

பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீடு, பிரஸ்மீட் என தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கி வரும் டிடி, தன்னுடைய உற்சாக பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவார். இவரது நிகழ்ச்சிகளுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் ரசிகர்களாக உள்ளனர்.

சினிமாவிலும் கவனம்

சினிமாவிலும் கவனம்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் டிடி. மேலும் சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படுகிறார். அவ்வப்போது கவர்ச்சியாகவும், சிறப்பாகவும் போட்டோஷுட்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் பிசி

சமூகவலைதளங்களில் பிசி

விஷேச நாட்களிலும் இவரது புகைப்படங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காணலாம். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை இவர் பெற்றுள்ளார். இவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று இத்தகைய புகைப்படங்களின்கீழ் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

பவர் பாண்டி படத்தில் நடிப்பு

பவர் பாண்டி படத்தில் நடிப்பு

இவர் தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017ல் வெளியான பவர் பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக நடித்துள்ளார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக அது இருந்தது. மிகவும் கேஷுவலாக அந்த கேரக்டரில் நடித்திருந்தார் டிடி.

சான்ஸ் குறித்து பேட்டி

சான்ஸ் குறித்து பேட்டி

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் தனக்கு சான்ஸ் கிடைத்தது எப்படி என்பது குறித்து மனம் திறந்துள்ளார் டிடி. திடீரென தனுஷ் தனக்கு கால் செய்து தனது டைரக்ஷனில் சிறிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் சிறிய கேரக்டராக இருந்தாலும் மெசேஜ் சொல்லும் கேரக்டர் என்று அவர் கூறியதாகவும் டிடி குறிப்பிட்டுள்ளார்.

உற்சாகத்துடன் நடிப்பு

உற்சாகத்துடன் நடிப்பு

இதையடுத்து அவர் பேசியதையே தான் மறந்து விட்டதாகவும் திடீரென மீண்டும் கால் செய்து அடுத்த வாரம் சூட்டிங் என்று அவர் கூறியதாகவும் இதையடுத்து தான் அன்றைய தினம் உற்சாகத்துடன் முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று மற்றவர்கள் நடிப்பையும் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டு நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X