DD Returns: அதிரி புதிரி ஹிட் அடித்த டிடி ரிட்டர்ன்ஸ்... வெற்றியை தாறுமாறாக கொண்டாடிய சந்தானம்!

சென்னை: காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், இப்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார்.

ஹீரோவாக பல படங்கள் நடித்துவிட்ட சந்தானத்துக்கு பெரிதாக ஹிட் என எதுவும் அமையவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு ஹீரோவாக பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

இதனையடுத்து இந்த வெற்றியை செம்ம தரமாக கொண்டாடி தீர்த்துள்ளார் சந்தானம்.

 DD Returns: Actor Santhanam celebrates the success of DD Returns

டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை கொண்டாடிய சந்தானம்: சின்ன திரையில் இருந்து சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் சந்தானமும் மிக முக்கியமானவர். விஜய் டிவியின் லொள்ளு சபா படத்தில் தொடங்கிய சந்தானத்தின் கேரியர், இப்போது சிங்கிள் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு தொடர்கிறது. ஆரம்பத்தில் காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த சந்தானம், திடீரென ஹீரோ ரூட்டுக்கு மாறினார்.

அதன்படி, தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனாலும், இவைகளில் ஒருசில படங்கள் மட்டுமே சந்தானத்துக்கு ஹீரோவாக அடையாளம் கொடுத்தது. பல படங்கள் முதலுக்கே மோசம் என்ற நிலையில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனிஷ்காந்த் என பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது. அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், காமெடியில் அதகளம் செய்துள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது.

முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது டிடி ரிட்டன்ஸ். மேலும், பாசிட்டிவான விமர்சனங்களும் கிடைத்ததால், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் வசூல் அதிகரித்தது. இரண்டாவது நாளில் 3 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 3.5 கோடி வரையும் வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் மூன்று நாட்களில் 8 முதல் 10 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இனி வரும் நாட்களிலும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருந்த சந்தானம், டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார். இதனையடுத்து டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட டிடி ரிட்டன்ஸ் படக்குழுவினர் சந்தானத்துக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை சந்தானம் டிவிட்டரில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களும் சந்தானம் உட்பட டிடி ரிட்டர்ன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X