DD Returns Box Office: பாக்ஸ் ஆபிஸில் வாரிகுவிக்கும் DD Returns... 10 நாட்களில் இத்தனை கோடியா?
சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது.
பிரேம் ஆனந்த் இயக்கிய இந்தப் படம் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது.

டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது.
இந்நிலையில், பத்து நாட்களில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்த வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்தே நாட்களில் கோடிகளில் வசூலித்த டிடி ரிட்டர்ன்ஸ்: காமெடியனாக நடித்து வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஆனாலும், சந்தானத்துக்கு ஹீரோவாக ஒருசில படங்கள் மட்டுமே கை கொடுத்தன. இதனால் சந்தானம் மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து அவரே சில பேட்டிகளிலும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனிஷ்காந்த் என பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது.
அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், காமெடியில் அதகளம் செய்துள்ளது. பணத்துக்காக பேய் பங்களாவில் மாட்டிக்கொண்டு சந்தானம் & கோ திணறுவதும், அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதும் தான் கதை. ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடியாக மட்டுமே இப்படத்தை இயக்கியிருந்தார் பிரேம் ஆனந்த். சந்தானம் மட்டும் இல்லாமல் மாறன், முனிஷ்காந்த் என அனைவருமே காமெடியில் ஸ்கோர் செய்திருந்தனர்.

இதனால் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்தது. முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த டிடி ரிட்டர்ன்ஸ், அடுத்தடுத்த நாட்களிலும் மாஸ் காட்டியது. கடந்த மாதம் 28ம் தேதி வெளியான படங்களிலேயே டிடி ரிட்டர்ன்ஸ் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால், இந்த வாரமும் தொடர்ந்து டிடி ரிட்டர்ன்ஸ் படம் பார்க்கவே ரசிகர்களும் ஆர்வம் காட்டினர்.
இதனால், படம் வெளியான பத்தே நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளது டிடி ரிட்டர்ன்ஸ். சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்தது டிடி ரிட்டர்ன்ஸ் தான் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடினார் சந்தானம். தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட டிடி ரிட்டர்ன்ஸ் படக்குழுவினர் சந்தானத்துக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











