Movie Release in Theatre: இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

சென்னை: வெள்ளிக்கிழமை வந்தாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். வாரம் முழுவதும் வேலை பார்த்து அலுத்துப்போனவர்கள் வார இறுதி நாட்களில் பொழுதை கழிக்க திரையரங்குகளுக்கு குடும்பத்தோடு வருவார்கள்.

இதனால், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகிவிடும். இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இதில் எந்த படம் நன்றாக கல்லாக்கட்டும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

DD Returns, LGM, Bro movies releasing in theaters on Friday

டிடி ரிட்டன்ஸ்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எல்.ஜி.எம்: தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள 'எல்.ஜி.எம்' படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 28ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார்.மேலும் இதில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தல தோனியின் முதல் தமிழ் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லவ்:

பரத்தின் 50 வது படமான 'லவ்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில், நடிகர் பரத், நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

DD Returns, LGM, Bro movies releasing in theaters on Friday

ப்ரோ: சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் படம் 2021ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இதில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் மற்றும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கில் ஒரு சில மாற்றங்களுடன் இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Rocky Aur Rani Kii Prem Kahaani: கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் , தர்மோந்திரா நடித்திருக்கும் திரைப்படம் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படமாகும். 178 கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே 90% செலவை திரும்பப் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ரொமான்டிக் காதல் கதையாக உருவாகி உள்ள இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X