ஷப்பா, பேக்கரியை டெவலப் பண்ணதுல இருந்து பிரெட் வேணும் பன் வேணும்னு...: டிடி
Recommended Video

சென்னை: ஷப்பா, பேக்கரியை டெவலப் பண்ணதுல இருந்து பிரெட் வேணும் பன் வேணும்னு...என்று டிடி ட்வீட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண் தொலைக்காட்சி பிரபலமாக தேர்வாகியுள்ளார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. இது குறித்து தகவல் அறிந்த திரையுலக பிரபலங்களும், டிவி பிரபலங்களும் டிடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களும் டிடிக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன்
வாழ்த்துக்கள் டிடி என்று சிவகார்த்திகேயன் ட்வீட்டியதை பார்த்த அவரோ, நன்றி உடன் பிறப்பே. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எஸ்கே ப்ரொடக்ஷனின் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கவிஞரை பார்க்க காத்திருக்கிறேன். கோல்டு காபி குடித்து பார்ட்டி பண்றோம் என்றார்.
வேண்டாம்
நன்றி டிடி. ஆனால் கோல்டு காபி வேண்டாம். கோடையில் தர்பூசணி ஜூஸ் குடிச்சு ஹெவியா பார்ட்டி பண்ணுவோம் ஆனால் உங்க ட்ரீட் என்று பதில் ட்வீட் போட்டார் சிவகார்த்திகேயன்.
டிடி
என் ட்ரீட்டா??ஷப்பா பேக்கரியை டெவலப் பண்ணதுல இருந்து பிரெட் வேணும் பன் வேணும்னு...ஓகே தர்பூசணியுடன் வீட்டுக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் டிடி.
பேக்கரி
டிடி ஏதோ காமெடியா பேக்கரி என்று சொல்ல நெட்டிசன்களோ என்னது பேக்கரி வச்சிருக்கீங்களா, பெயர் என்ன, எப்படி வந்தது என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











