பளீச்சென குட்டை டவுசரில் படகில் என்ஜாய் செய்த டிடி... அதிரி புதிரி படங்கள்

துபாய் : மாலத்தீவை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் செல்லும் ஃபேவரைட் இடமாக மாறி உள்ளது துபாய். தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் இந்த ஆண்டு புத்தாண்டை துபாயில் கொண்டாடி உள்ளனர்.

சமந்தா, அமலாப்பால், நயன்தாரா -விக்னேஷ் சிவன் என பலரும் துபாய் சென்று, புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இந்த வரிசையில் நடிகையும், பிரபல டிவி தொகுப்பாளருமான டிடி.,யும் துபாய் சென்றுள்ளார்.

டிடி பகிர்ந்த வீடியோ

டிடி பகிர்ந்த வீடியோ

துபாயில் தான் ஜாலியாக விடுமுறையை என்ஜாய் செய்யும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அப்படி லேட்டஸ்டாக படகில் ஜாலியாக பயணம் செய்த ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார் டிடி.

படகில் ஓவர் கிளாமர்

படகில் ஓவர் கிளாமர்

பளீச்சென்ற பால் வெள்ளை நிறத்தில் டிரான்ஸ்பெரன்ட் சட்டை, குட்டை டவுசர், தலையில் தொப்பி என படகில் இரண்டு மணி நேரம் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோவோடு டிடி பதிவிட்டுள்ள கேப்ஷனில், துபாயில் சிறப்பான இரண்டு மணி நேரம். இந்த படகில் எனக்கு விருப்பானவர்களை அழைத்துச் செல்வது எனது கனவுகளில் ஒன்று.

அளவில்லாத மகிழ்ச்சி

அளவில்லாத மகிழ்ச்சி

நம் குழந்தைகளுக்காக நாம் ஏதாவது செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் கடைசி நிமிடத்தில் எனக்காக இதை திட்டமிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். துபாயின் மெரினா துறைமுகத்தில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகைகளையே மிஞ்சிட்டார்

பாலிவுட் நடிகைகளையே மிஞ்சிட்டார்

நயன்தாரா, பாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு டிடி கொடுத்துள்ள போசில், அவரது அழகை வர்ணித்து ரசிகர்களை கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். என்னச்சா டிடி.,க்கு ஏன் திடீரென ஓவர் கிளாமரில் இறங்கி விட்டார் என சில கேள்வி கேட்டு வருகின்றனர்.

ப்யூட்டி க்யூன் டிடி

ப்யூட்டி க்யூன் டிடி

டிடி.,யின் செக கிளாமரான வீடியோவை பார்த்து விட்டு, ப்யூட்டி க்யூன் என ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். செம என்ஜாய் நிமிடங்கள், நல்லா என்ஜாய் பண்ணுங்க என சொல்லி ஹார்ட்களால் கமெண்ட் பாக்சை நிரப்பி உள்ளனர். கூட இருக்க பசங்க யாரு...நயன்தாராவையே மிஞ்சிங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X