For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரே நேரத்துல நாலு பேர லவ் பண்றது தான் தப்பு.. இரண்டாவது காதல் குறித்த கேள்விக்கு டிடி அதிரடி!

  |

  சென்னை: இரண்டாவது காதல் குறித்த கேள்விக்கு அதிரடியாக தொகுப்பாளினி டிடி நீலகண்டன் பதில் அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விஜய் டிவியின் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் திவ்ய தர்ஷினியை பலரும் செல்லமாக டிடி என்றே அழைத்து வருகின்றனர்.

  மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

  மேலும், முதல் திருமணம் குறித்த கேள்விக்கும் அசால்ட்டாக பளிச்சென பதில் அளித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் டிடி.

  பிரபல தொகுப்பாளினி

  பிரபல தொகுப்பாளினி

  விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான திவ்ய தர்ஷினி ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அன்பை பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியையும் தனது ஸ்டைலில் டிடி தொகுத்து வழங்கி அசத்தி இருந்தார்.

  விட்டு விலகிய டிடி

  விட்டு விலகிய டிடி

  கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் உதவி இயக்குநருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண உறவு இருவருக்கும் சரியாக வராத காரணத்தால் கடந்த 2017ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை விவாகரத்து செய்து கொண்டார் டிடி.

  டிடி பதில்கள்

  டிடி பதில்கள்

  விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடியை சுற்றி ஏகப்பட்ட வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வலம் வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது ஓப்பனாக பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் அவர் செய்த சாட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  பழைய வாழ்க்கை பாதிக்குமா

  அந்த சாட் செஷனில் ரசிகர் ஒருவர், உங்களுடைய கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த சில கசப்பான அனுபவங்கள் தற்போது இருக்கும் உங்களின் சந்தோஷமான வாழ்க்கையை பாதிக்கிறதா? என கேள்வி எழுப்பினார். உடனடியாக முடிந்தது முடிந்து போனது தான். பழையதை நினைக்கவே கூடாது. அது தரும் பாடத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என பட்டாசாய் பதில் அளித்தார்.

  அதென்ன செகண்ட் லவ்

  இன்னொரு ரசிகர் இரண்டாவது காதல் குறித்த நம்பிக்கை இருக்கா? என கேள்வி எழுப்ப, அதென்ன செகண்ட் லவ்.. லவ் ஒருவாட்டி தான் வருமா? இல்லை இரண்டு வாட்டி வருமா? அதெல்லாம் சும்மா சினிமாலா தான். காதல் வாழ்வின் ஒரு அங்கம். அது எப்போதுமே நம்முடனே இருக்கும் என்றார்.

  அதுதான் தப்பு

  அதுதான் தப்பு

  மேலும், ஒரே நேரத்துல நாலு பேர லவ் பண்ணாதான் தப்பு.. ஆனால், வாழ்க்கையில ரெண்டு மூணு லவ் இருந்தா கூட தப்பில்லை என்றபடி அந்த கேள்விக்கு செம ஃபிராங்காக தனது மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி பாராட்டுக்களை அள்ளி வருகிறார் டிடி நீலகண்டன்.

  மோசமான உறவு

  மோசமான உறவு

  சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியில் டிடி நீலகண்டன் மோசமான உறவில் சிக்கித் தவித்தால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதனை விட்டு வெளியே வர தயங்க வேண்டாம். தூக்கிப் போட்டுட்டு உங்களுக்கான வாழ்க்கையை நோக்கி நகர்ந்து செல்லுங்கள், உலகம் மிகவும் பெரியது என பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், இந்த லேட்டஸ்ட் சாட் வைரலாகி வருகிறது.

  English summary
  Vijay Tv anchor DD’s open statement about second love and her past life in a recent fans interaction video goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X