நீச்சல் குளத்தில் பிகினியில் மிதக்கும் டிடி...இணையத்தில் வைரலாகும் வீடியோ
சென்னை : இந்திய சினிமா மற்றும் டிவி பிரபலங்களின் மனம் கவர்ந்த இடமாக மாறி வருகிறது மாலத்தீவு. சமீப நாட்களாக பிரபலங்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக மாலத்தீவிற்கு சென்று அந்த போட்டோக்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் நடிகைகள் பலர் கவர்ச்சிகரமாக பிகினியில், மாலத்தீவில் உல்லாசமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். ரகுல் ப்ரீத் சிங், விஷ்ணு விஷால் ஆகியோரைத் தொடர்ந்து பிரபல நடிகையும், டிவி தொகுப்பாளினியுமான டிடி என்ற திவ்யதர்ஷினியும் மாலத்தீவு சென்றுள்ளார்.
விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ள டிடி, தனது போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நீச்சல் குளத்தில் பிகினி உடையில் மிதந்தபடி, காலை உணவை சாப்பிடும் வீடியோவை டிடி வெளியிட்டுள்ளார்.

கலர்ஃபுல் பிகினியில் ஒட்டல் ஊழியர்களிடம் பல்வேறு வகையான உணவுகள் பற்றி அவர் விசாரிப்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. பிகினியில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிடியின் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











