பர்த்டே பாய் சிவகார்த்திகேயனை சுயநலமாக வாழ்த்திய டிடி
சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பெரிய ஆளாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டிடி
டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்கும் இன்று தான் பிறந்தநாள். அவர் சிவகார்த்திகேயனுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, உடன் பிறப்பே பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களால் என் பிறந்தநாள் பிரபலமாகி வருகிறது. அதனால் நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என சுயநலமாக வாழ்த்துகிறேன். அன்பாக இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் திவ்யதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார். வாழ்த்திய அவருக்கு டிடி நன்றி தெரிவித்துள்ளார்.
ராதிகா சரத்குமார்
பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி வரும் ராதிகா சரத்குமார் டிடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்யா
டிடிக்கு நடிகர் ஆர்யாவும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிலுக்கு மிக்க நன்றி ஆர்யா அவர்களே என ட்வீட்டியுள்ளார் டிடி.


Click it and Unblock the Notifications











