டிரெஸ் போட்ருக்கீங்களா இல்லையா.. பிரபல டிவி தொகுப்பாளினியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல டிவி தொகுப்பாளினி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டிரெஸ் போட்ருக்கிங்களா இல்லையா என கேட்டு மரண பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடிக்கு சினிமா ஹீரோயின்களுக்கு சமமாக ரசிகர்கள் உள்ளனர். டிடி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் விருது நிகழ்ச்சிகள் உட்பட பல சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். பல சினிமா பிரபலங்களையும் நேர்க்காணல் செய்திருக்கிறார் டிடி.

டிடி சர்ச்சைகள்
இதனால் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என பல பிரபலங்கள் மத்தியிலும் பரிட்சயம் ஆனார். தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டிடி.

காரணம்
ஆனால் அடுத்த சில ஆண்டிலேயே இருவரின் திருமண வாழ்க்கையும் முறிந்தது. டிடி தனது சினிமாத்துறை நண்பர்களுடன் இரவு பார்ட்டிகளில் பங்கேற்பது, வீட்டிற்கு தாமதமாக வருவது, குடிப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களே அவரது விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

போட்டோக்கள்
விவாகரத்துக்கு பிறகும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார் டிடி. இரவு பார்ட்டி ஒன்றில் மூச்சு முட்ட குடித்துவிட்டு, நடக்கக்கூட முடியாமல் அவர் தள்ளாடிய வீடியோக்களும் போட்டோக்களும் வைரலானது. அதனை தொடர்ந்து தனது சகோதரருடன் பிகினியில் ஆட்டம் போட்ட போட்டோக்களும் தீயாய் பரவியது.

காலில் பிராக்ட்சர்
இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னதான் தம்பி என்றாலும் இப்படியா என்று அவரை கழுவி ஊற்றினர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் பிராக்ட்சர் ஆகிவிட்டதாக கூறி கட்டுடன் போட்டோவை ஷேர் செய்தார்.

டிரெஸே இல்லாமல்
இந்நிலையில் நேற்று இரவு க்ளோஸப்பில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் டிடி. போட்டோ ரொம்பவே க்ளோஸில் எடுக்கப்பட்டுள்ளதால் டிடி அணிந்திருக்கும் டிரெஸ் சுத்தமாக தெரியவில்லை. சட்டென பார்க்கும் போது டிரெஸே அணியாதது போன்று உள்ளது.

டிரெஸ் இல்லையா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் டிரெஸ் போட்ருக்கிங்களா இல்லையா என கேட்டு பங்கம் செய்துள்ளனர். மேலும் டிடி தனது போட்டோவுக்கு கொடுத்திருக்கும் கேப்ஷனை பார்த்தும் விளாசியிருக்கின்றனர். டிடி தனது போட்டோவுக்கு, சும்மா சன்லைட் நல்லா இருந்துச்சு.. செல்பி எடுத்தேன் போஸ்ட் பண்ணேன் என குறிப்பிட்டுள்ளார்.

இரவில் எப்படி?
இரவில் எப்படி சன்லைட் இருக்கும்? அளவா அளந்து விடுங்க என்று சாடியிருக்கின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்துள்ளனர். டிடி தனது கேப்ஷனை தமிழிலும் இங்கிலிஷிலும் கூறியிருப்பதால், நீங்கள் என்ன மேஜர் சுந்தராஜனை போல் பேசுகிறீர்கள் என்றும் கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











