டிடியால் மொத்தமாக மாறிய அக்கா.. நீச்சல் உடையில் போஸ்.. இதெல்லாம் தேவையா என விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிரபல தொகுப்பாளினி டிடியின் அக்கா பிரியதர்ஷினி கணவருடன் நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் பல லைக்குகளை பெற்று வருகிறது.
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியான டிடி என்கிற திவ்யதர்ஷினியை அனைவருக்கும் பிடிக்கும். அவரின் அழகான பேச்சாலும், க்யூட்டான அழகாலும் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்து இருக்கிறார் டிடி.
டிடியின் க்யூட்டான அக்கா தான் பிரியதர்ஷினி இவரும் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

பிரியதர்ஷினி
1984ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டை பெற்றார்.

தொகுப்பாளினி
1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விழுதுகள் சீரியலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த பிரியதர்ஷினி கலைஞர் தொலைக்காட்சியில் படவரிசை பத்து என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலில்
சில ஆண்டுகள் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்தார் பிரியதர்ஷினி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ரேணுகா கேரக்டரில் யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கும் இவர் இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

நீச்சல் உடையில் பிரியதர்ஷினி
ஓய்வு நேரங்களில் தனது கணவருடன் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி தனது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், நீங்களும் டிடியைப் போல மொத்தமாக மாறிவிட்டீர்களே என்றும், இதெல்லாம் தேவையா என விளாசி வருகின்றனர். பிரியாதர்ஷினி தொகுப்பாளினியாக இருந்த போது, ரமணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியதர்ஷினியின் மகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அவரது தந்தைக்கு இணையான உயரத்தில் ஹீரோ போல இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











