சிறப்பான, தரமான சம்பவத்துடன் மீண்டும் டிடி.. புரோமோவே கொலகாண்டா இருக்கே!
என்கிட்ட மோதாதே 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் டிடி.
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி.
விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் டிடி. அவரது ஜாலியான பேச்சு மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பால் அவருக்கு ரசிகர்கள் அதிகம். விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, அச்சம் தவிர் என பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சின்னத்திரை மட்டுமின்றி ப.பாண்டி, சர்வம் தாளமயம் என சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். திவ்யதர்ஷினி என்ற இவரது பெயரை சுருக்கி ரசிகர்கள் டிடி என அழைக்கின்றனர். 20 வருடங்களாக அவர் சின்னத்திரையில் இருந்து வருகிறார்.
அவர் கடைசியாக விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் விருது விழா தொகுத்து வழங்கியிருந்தார்.
இப்போது மீண்டும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் விஜய் டிவியில் கலக்க வருகிறார் டிடி. அந்த நிகழ்ச்சிக்கான புரோமோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.
ரஜினியின் பேட்ட பட ஸ்டைலில் புரொமோவே வேற லெவலில் செம மாஸாக இருக்கிறது. அதில், சிறப்பான தரமான பன் செய்ய வருவதாக டிடி குறிப்பிட்டுள்ளார். இந்த புரோமோ வீடியோவை இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 450க்கும் மேற்பட்டோர் டிடியை வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











