அந்த பரதேசியக் காணோம்.. டபுள் மீனிங்கில் டிடி ஷேர் செய்த வீடியோ.. தீயாய் பரவுது!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி ஷேர் செய்துள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது.
பிரபல தொகுப்பாளினி, சினிமா நடிகை என பல முகங்கள் கொண்டவர் டிடி. பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்னார்.
இவரது கலகலப்பான பேச்சுக்கு திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். தமிழ் மட்டுமின்றி பல மொழி சினிமா பிரபலங்களையும் நேர்க்காணல் செய்திருக்கிறார் டிடி.

சர்ச்சைகள்
இதனால் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என பிரபலங்கள் மத்தியிலும் பெரும் பிரபலம். தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர்.

இடையூறு இல்லாமல்
தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டிடி. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அவரது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இருப்பினும் தனது தொகுப்பாளர் வேலை மற்றும் சினிமாவில் நடிப்பதை எந்த இடையூறும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறார்.

ஜொள்ளு விடாதவர்கள்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஹீரோயின்களுக்கு போட்டியாக கொஞ்சும் அழகில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடாதவர்களே இல்லை எனலாம்.
View this post on InstagramExact mind voice True emotions 🤪 #ddreels #rakitarakita
A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on
இன்ஸ்டாவில் வீடியோ
இன்னும் சில நெட்டிசன்கள் ஒரு நயன்தாராவை தமிழ் சினிமா இழந்துவிட்டது என அவ்வப்போது தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

அந்த பரதேசிய..
அதாவது ஜகமே தந்திரம் படத்தில் இடம் பெற்று ரகிட ரகிட ரகிட பாடலுக் டப்ஸ் மேஷ் செய்துள்ளார். குறிப்பாக அதில் வரும் அந்த நாலு பேர இதுவரைக்கும் பார்த்ததில்ல நானும்.. எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணும்.. என்ற வரிகளுக்கு டப்ஸ் மேஷ் செய்துள்ளார்.

யாரை சொல்கிறீர்கள்?
மேலும் அதற்கு எக்ஸாக்ட் மைண்ட் வாய்ஸ்.. உண்மையான உணர்வுகள் என கேப்ஷன் கொடுத்துள்ளார். டிடியின் இந்த வீடியோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் என்ன டபுள் மீனிங்கில் பேசுகிறார்களா? யாரை சொல்கிறீர்கள் என குடைந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications