பேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்
சென்னை: சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. சந்தானம் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
காரணம் ரஜினிகாந்த் மற்றும் அஜித் பேசிய வசனங்கள் வந்துள்ளது எனலாம்.
டீஸர்
டீஸரில் பேய் பேட்ட வசனத்தை பேசுகிறது பதிலுக்கு சந்தானம் விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித் பேசிய வசனத்தை பேசுகிறார்.
அஜித்
ஏற்கனவே பேட்ட ட்ரெய்லருக்கு பதிலடி கொடுப்பது போன்று வந்த விஸ்வாசம் ட்ரெய்லரால் சமூக வலைதளத்தில் பெரிய மோதலே நடந்துள்ளது. இந்நிலையில் இந்த சந்தானம் வேறு நேரம், காலம் தெரியாம கிளப்பிவிடுறாரு.

மொட்டை ராஜேந்திரன்
டீஸரில் மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சி தான் அல்டிமேட். சிரித்து சிரித்து முடியல பாஸ். டீஸரை பார்த்தால் நன்றாக உள்ளது. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெயிட்டிங்
டிடி 2 டீஸர் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. சந்தானத்தை திரையில் பார்க்க காத்திருக்கிறார்கள். சீக்கிரமாக வாங்க சந்தானம்.


Click it and Unblock the Notifications











