இந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை!

By Vignesh Selvaraj

Recommended Video

இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை!- வீடியோ

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹாலிவுட் திரைப்படமான 'டெட்பூல் 2' இந்தியா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. 'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்த ஹாலிவுட் படமும் வரவேற்பு பெற்றுள்ளது.

வெளியான முதல் நாளில் ரூ. 11.25 கோடி, இரண்டாவது நாளில் 10.65 கோடி ரூபாய், மூன்றாவது நாளில் ரூ. 9.45 கோடி என வசூலித்து இதுவரை இப்படம் 33 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Dead pool 2 weekend collection in india

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களின் ஓப்பனிங் டே வசூல் சாதனையில் 'டெட்பூல் 2' படம் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு 'அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படம் 31 கோடி வசூலையும், 'பாகி 2' படம் 25 கோடி வசூலையும், 'பத்மாவத்' ரூ. 19 கோடி வசூலையும் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் 'டெட்பூல் 2' திரைப்படம் ரூ.11.25 கோடி வசூலுடன் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. மார்வெல்லின் 'அவென்ஜர்ஸ்' படத்திற்குப் பிறகு இந்தப் படமும் உலக அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

130 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமெரிக்காவில் சுமார் 4300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. முதல் நாளில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 50 மில்லியன் டாலர் கடந்து வசூலித்திருக்கிறது 'டெட் பூல் 2'.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X