பேச்சுவார்த்தையில் இழுபறி: 9-ம் தேதி வரை படப்பிடிப்பு கிடையாது!

By Shankar

பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே சம்பள உயர்வு குறித்து நீடித்து வரும் மோதல் நேற்று முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

நேற்று இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால், மீண்டும் 9-ம் தேதி சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. அதுவரை படப்பிடிப்புகள் நடக்காது என்ற நிலையை பெப்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எஸ் ஏ சந்திரசேகரன் தலைமையிலும், பெப்சி பிரதிநிதிகள் இயக்குநர் அமீர் தலைமையிலும் நேற்று பேச்சு நடத்தினர்.

இதுகுறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழக அரசின் நோக்கம் புரிந்து நாங்கள் சிலவற்றை விட்டுத் தர முன் வந்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் நல்ல முடிவை எட்டி விடுவோம்," என்றார்.

இயக்குநர் அமீர் கூறுகையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேசிய பிறகுதான் விஷயம் முடிவாகும். அதுவரை படப்பிடிப்புகள் இருக்காது. இப்போதுள்ள நிலையே தொடரும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X