Deadpool & Wolverine Box Office: 1674 கோடியில் உருவான டெட்பூல் & வோல்வரின்.. முதல் நாள் வசூல்?
லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அடல்ட் ஒன்லி காமெடிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த டெட்பூல் & வோல்வரின் படத்தை ஹாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவிலும் இந்த படம் முதல் நாளில் பல அக்ஷய் குமாரின் சமீபத்திய படங்களின் வாழ்நாள் சாதனையையே முறியடித்துள்ளது என்றும் டெட்பூல் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

200 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1674 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இந்த டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் முதல் நாளிலேயே அமெரிக்காவில் மட்டும் 35 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். அதன் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
டெட்பூல் & வோல்வரின் கதை: ஹியூ ஜேக்மேன் பல வருடங்கள் கழித்து மீண்டும் எக்ஸ் மேனாக நடித்துள்ளார். லோகன் இறந்து விட்ட நிலையில், அவரது இன்னொரு வேரியன்டை கண்டு பிடித்து தனது உலகத்தை காப்பாற்ற டெட்பூல் முயற்சிப்பது தான் இந்த படத்தின் கதை. ரியான் ரெனால்ட்ஸின் காமெடி டைமிங் பக்காவாக செட்டாகியுள்ள நிலையில், ஆபாச வசனங்களையும் ரசித்து இளைஞர்கள் சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முதல் நாள் வசூல்: இந்தியாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்த படத்துக்குப் போட்டியாக தமிழில் வெளியான ராயன் திரைப்படம் இந்தியா முழுவதும் 12.5 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல் வார வசூல்: உலகளவில் இந்த படம் முதல் வாரத்தில் மட்டுமே 340 மில்லியன் டாலர்களை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2800 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. அந்தளவுக்கு படத்திற்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து இருக்கிறது. 200 மில்லியன் டாலரில் உருவாகியுள்ள இந்த படம் முதல் 3 நாட்களில் 340 மில்லியன் டாலர் வசூல் செய்தால் அதைவிட பெரிய ஜாக்பாட் என்ன இருக்கப் போகிறது என்கின்றனர். அப்படியே அடுத்த படத்தில் அயன்மேன் வேரியன்ட்டையும் கொண்டு வந்துடுங்க மார்வெல் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











