Just In
- 4 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடி.. உதை.. குத்து.. அடேங்கப்பா உப்பல்!
மும்பை: டீனா உப்பல்.. கவர்ச்சியாக மட்டும் இல்லை.. களேபரமாகவும் இருக்கிறார் இந்த இங்கிலாந்து வனிதை...
இவர் சாதா அழகி மட்டும் இல்லை. மிஸ் இந்தியா யு.கே. பட்டம் வென்ற பேரழகியும் கூட..
இப்போது இவரும் பாலிவுட்டின் பிரிக்க முடியாத ஒரு முக்கிய கவர்ச்சி அங்கமாக மாறி வருகிறார். கவர்ச்சி மட்டுமல்ல, கை கால்களைக் குறி வைத்து அடி உதையில் பின்னிப் பெடலெடுத்தும் பிரமிப்பூட்டுகிறார்.

காட்ரான் கி கிலாடி....
இது ஒரு ரியாலிட்டி ஷோவின் பெயர். Fear Factor: Khatron Ke Khiladi என்ற இந்த ரியாலிட்டி ஷோவில் கலக்கி வருகிறார் உப்பல். கலர்ஸ் டிவியில் இது ஒளிபரப்பாகிறது.

அடி.. உதை.. குத்து
இந்த ஷோவில் கவர்ச்சிப் பாவையாக மட்டுமல்லாமல் பாய்ந்து பாய்ந்து அடி உதை விடும் அதிரடிப் பெண்ணாகவும் தலை காட்டி திரையை நடுநடுங்க வைத்திருக்கிறார் உப்பல்.

5வது சீசன்.. அஞ்சாத பெண் சிங்கம் உப்பல்....
தற்போது 5வது சீசன் காட்ரான் கி கிலாடி ஒளிபரப்பாகிறது. இதில் அஞ்சாத பெண் சிங்கமாக கலக்கிக் கொண்டிருக்கிறார் உப்பல்.

சவால்லாம் இவருக்கு சால்னா மாதிரிங்கோ...
சவால்களையெல்லாம் படு சாதாரணமாக எதிர்கொண்டு பிரமாதப்படுத்துகிறார் உப்பல்.

செம போட்டி
உப்பல் உள்பட இதில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அத்தனை பேருமே கலக்கி வருகின்றனர். ஆனால் உப்பல் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் பயமுறுத்துகிறார்.

ரிவால்வர் ராணி...
ஷோவில் கலந்து கொண்டபடியே சினிமாவிலும் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் உப்பல். கங்கனா ரணாவத்துடன் ரிவால்வர் ராணி படத்தில் சிறப்புத் தோற்றத்தி்ல இவர் வருகிறார்.

நான் ஒரு அமேஸிங் பாவை...
தன்னைப் பற்றி உப்பல் கூறுகையில், நான் ஒரு அமேஸிங்கான திறமைசாலி. எனக்குப் பயம்ன்னா என்னவென்றே தெரியாது. ஸ்டண்ட் காட்சிகளில் கலக்கி விடுவேன். ஷோவிலும் கூட அப்படித்தான் பயமுறுத்தி வருகிறேன். ஆனால் எனக்கு எதிரிகளை விட நண்பர்களே அதிகம் கிடைத்துள்ளனர் என்கிறார் முண்டா தட்டியபடி...
உப்பலிடம் திறமைகள் சற்று உப்பலாகத்தான் கீது மாமே...