For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேரனுக்கு ரணகளம்.. ஆனால் அபிராமிக்கோ குதூகலம்.. இது தேவையா.. வெளில வந்துருங்க சார்!

|

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீஸன் 3ல் தினந்தோறும் நடக்கும் கூத்துகளைப் பார்க்கும்போது தேசிய விருது வாங்கிய இயக்குநர் சேரன் இப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டிய அவசியமே இல்லை என்று பார்வையாளர்களும் பொதுமக்களும் ஆதங்கப்படுகின்றனர்.

ஹலோ பிக் பாஸ் சார், உங்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களை காலையில் எழுந்த உடனேயே தயவு செய்து மேக்அப் எல்லாத்தையும்(???) போட்டுக்கொண்டு அதற்கு பின்பு வெளியில் வந்து ஆடச் சொல்லுங்கள் சார். இளவட்ட பசங்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து நடுநடுங்கிப் போகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, ரேஷ்மா, சித்தப்பு சரவணன் என கனமான பலமான போட்டியாளர்கள் வெளியேறிய பிறகு உடல் பலத்தை பரிசோதிக்கும் வகையிலான கடுமையான டாஸ்க்குகளை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார் பிக்பாஸ். (அவங்கள்ளாம் போகட்டும், உங்களை எல்லாம் நான் வச்சி செய்யிறேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்த மாதிரியே தெரியுதே).

அது குறித்த புரமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிக்கப்பட்டு அணிக்கு இரண்டு பேர் என பிக்பாஸால் நியமிக்கப்பட்டு இந்த புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது.

டாஸ்க்

டாஸ்க்

தர்ஷன், சாண்டி, முகென் ஆகியோர் இந்த டாஸ்க்கில் நன்றாகவே தாக்குப் பிடித்தனர். கவின், சோஃபாவை தாண்டும் போது மல்லாக்க அடித்து விழ, சேரனோ ஒரு கட்டத்தில் முடியாமல், மூச்சு முட்ட படுத்தே விட்டார். தேசிய விருது படம் கொடுத்த இயக்குனர் இப்படி எல்லாம் கஷ்டப்படுவதை பார்க்கும்போது, உண்மையிலேயே நமக்கு அது வேதனையாகவே உள்ளது.

சோதனை மேல் சோதனை

சோதனை மேல் சோதனை

அவருக்கு மட்டும் ஏன் சோதனை மேல் சோதனையாக தொடர்ந்து நடக்கிறது. ஏற்கனவே மீரா சேரனை அசிங்கப்படுத்தி அழ வைத்தார். வெளியே செல்லும் சமயத்தில் கூட நினைத்ததை சாதித்து விட்டீர்கள் என்று குத்தலாக ஒரு வார்த்தையை கூறி விட்டு வெளியே சென்றார்.

வசந்தபாலன் உருக்கம்

வசந்தபாலன் உருக்கம்

பல பேர் முன்னிலையில், சரவணன் சேரனை ஒருமையில் அழைத்த போதே, இயக்குனர் வசந்தபாலன், நீங்கள் வெளியே வந்து விடுங்கள் சேரன், உங்களது உயரம் என்ன என்பது அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது (கழுதைக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசனை), என உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார்.

சேரன் பரிதாபம்

சேரன் பரிதாபம்

நிச்சயம் அந்த கடிதத்தின் விவரம் சேரனுக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சில அபிமானிகள் சேரனை வலுக் கட்டாயமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வருவோம் என்று கூறினர். ஆனால், சேரனின் இந்த நிலையை பார்க்கும் போது வசந்தபாலன் சொன்னது உண்மையாகி விடக் கூடாதா என்று நமக்கே எண்ணத் தோன்றுகிறது. இன்னும் எவ்வளவு தான் கார்னர் செய்வார்கள் என்று தெரியவில்லை.

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

ஒருபக்கம் இவ்வளவு அமளி துமளி நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் முகெனிடம் அபிராமி லவ் புரபோஸ் செய்து கொண்டிருந்தார் (ஆமாங்க, நாட்டுல இப்ப நடக்குற காஷ்மீர் பிரச்சனையை விட இது ரொம்ப அவசியம் பாருங்க). முகேனை இப்படி எமோஷனல் பிளாக் மெயில் செய்து கோபப்படுத்தி வெளியேற்றி விடுவார் போல. இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்பு கேட்குது அபிராமி அம்மணிக்கு.

கஸ்தூரி அக்கப்போர்

கஸ்தூரி அக்கப்போர்

போதாக்குறைக்கு நம்ம கஸ்தூரியும் வைல்டு கார்டு மூலமாக பிக் பாஸ் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டார். இனி என்னன்ன அக்கப்போர் எல்லாம் நடக்குமோ என்று பார்வையாளர்கள் கண்களை அகல விரித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

English summary
Viewers and the public are convinced that national award-winning director Cheran does not have to suffer all this while looking at the day-to-day tales of season 3 of the Big Boss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more