twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூக்கு.. வைக்காதே.. இப்படியே பிரச்சனை பண்ணி பப்ளிசிட்டி கொடுங்க: மயில்சாமி மடேர்! #Mersal

    By Siva
    |

    Recommended Video

    சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு படத்தை பார்த்து இதை தூக்கு, இதை வைக்காத என்று சொன்னீர்கள் என்றால் தேனாண்டாள் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருக்கோ அதே போன்று அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்கிறார் மயில்சாமி.

    தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் மெர்சல் சர்ச்சை குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் மயில்சாமி கலந்து கொண்டு தனக்கே உரிய பாணியில் பேசினார்.

    நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

    நூறாவது நாள்

    நூறாவது நாள் என்று ஒரு படம். ஒரு தனிப்பட்ட நபர் ஒன்பது கொலைகள் செய்வது போன்று படம் எடுத்தார்கள். அதன் பிறகு ஊமை விழிகள் என்ற படத்தில் ஒரு கான்செப்ட் ஆட்டோ சங்கரை பேஸ் பண்ணியிருந்தது. இது போன்று ஒவ்வொரு படங்களிலும் சமுதாயத்தில் நடப்பவைகளை காட்சிகளாக வைக்கும்போது இந்த மாதிரி நடந்தது படத்தில் வச்சாங்க.

    காட்சிகள்

    காட்சிகள்

    நுங்கம்பாக்கத்தில் கழுத்தை அறுத்த சம்பவம் படமாகிறது. டெல்லியில் பஸ்ஸில் பலாத்காரம் செய்த சீன் படங்களில் வந்துள்ளது. நடக்கிறதால் அதை வச்சாங்க. அதை எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள்.

    விஜய்

    விஜய்

    ஜிஎஸ்டி என்கிற விஷயத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதை அவர் சொல்லியிருக்கிறார். அதில் தவறு எதுவும் இல்லை. இல்லாத விஷயத்தை விஜய் சொன்னால் சரி. அவர் சொன்னது தவறு என்று லட்சக்கணக்கானவர்கள் கொடி ஏந்தி போராட்டம் பண்ணியிருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம். யாருமே பண்ணவில்லையே.

    நியாயம்

    நியாயம்

    நாம் கொண்டு வந்த சட்டத்தை இங்கு தவறான முறையில் சொல்கிறார்களே என்கிற கான்செப்ட்டில் சென்சார் முடிந்த பிறகு அதை விளக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயமே கிடையாது.

    மெர்சல்

    மெர்சல்

    ஒவ்வொரு பெரிய படத்திற்கும் பப்ளிசிட்டிக்கு மட்டும் ரூ. 2 கோடி பட்ஜெட். எனக்கு தெரிந்து திரையுலகத்தில் இந்தியா முழுவதும் மெர்சலுக்கு இப்படி ஒரு பப்ளிசிட்டி யாருமே பண்ண முடியாது. அந்த காட்சிகள் எப்பொழுது வெட்டப்பட்டதோ அது வாட்ஸ்ஆப்பில் பறக்கிறது.

    பிரபலம்

    பிரபலம்

    இத்தனை படங்களில் இல்லாத அளவுக்கு விஜய் இந்த படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இதற்காக மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த சிலருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    இந்த படத்திற்கு மட்டும் இல்லை ஒவ்வொரு படத்திற்கும் இதே மாதிரி பப்ளிசிட்டி செய்து தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள். அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு படத்தை பார்த்து இதை தூக்கு, இதை வைக்காத என்று சொன்னீர்கள் என்றால் தேனாண்டாள் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருக்கோ அதே போன்று அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். மத்திய அரசே, மாநில அரசே ஒவ்வொரு படத்திற்கும் நீங்களே விமர்சனம் பண்ணுங்க, எந்த தயாரிப்பாளரும் டிவியில் விளம்பரம் பண்ணத் தேவையில்லை என்றார் மயில்சாமி.

    English summary
    Actor Mayilsamy has asked the minsiters to oppose all the movies like Mersal and give free publicity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X