டியர் திருமலையானே.. அது நடந்துடுச்சு.. நயன்தாராவுடன் மீண்டும் திருப்பதியில் விக்னேஷ் சிவன்!

சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீண்டும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து 'டியர் திருமலையானே' என பெருமாளுக்கு பெரிய நன்றியை சொல்லி உள்ளார்.

வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் இன்னொரு பக்கம் டிரெண்டாகி வருகிறது.

மிட்நைட்டில் திருப்பதியில்

மிட்நைட்டில் திருப்பதியில்

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாவதை முன்னிட்டு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய நள்ளிரவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்றிருந்தனர். அதிகாலை 2.22 மணிக்கு திருப்பதியில் இருந்து ரிப்போர்ட்டிங் என காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 'இரண்டு' காதல் விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.

தியேட்டர் விசிட்

தியேட்டர் விசிட்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு புதிய படங்களை இயக்காமல் இருந்து வந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது அடுத்தடுத்து பெரிய படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள நிலையில், திடீரென தேவி தியேட்டருக்கு நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் விசிட் அடித்து ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.

சீரடியில் தரிசனம்

சீரடியில் தரிசனம்

படத்தின் வெற்றியால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செம ஹேப்பி ஆகி உள்ளனர். எந்த எந்த கோயில்களில் எல்லாம் முன்னதாக வேண்டுதல் வைத்தார்களோ அதையெல்லாம் நிறைவேற்றி கடவுள்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை சீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

திருப்பதியில் திருமணமா

திருப்பதியில் திருமணமா

இந்நிலையில், வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் உறுதியான தகவலை தெரிவித்துள்ளது. நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த காதல் கதை 7 வருடங்கள் கழித்து திருமணத்தில் வந்து முடியப் போவதை அறிந்த ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

மீண்டும் திருப்பதியில்

மீண்டும் திருப்பதியில்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸை முன்னிட்டு படம் நல்லா ஓடணும் கோயிந்தா என வேண்டிக் கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா படம் வெற்றி பெற்ற நிலையில், பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் தனது வருங்கால மனைவியான நயன்தாராவுடன் திருப்பதிக்கு விசிட் அடித்துள்ளார்.

டியர் திருமலையானே

டியர் திருமலையானே

காதலி நயன்தாராவை தங்கமே என செல்லமாக அழைத்து வரும் அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது திருப்பதியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதற்கு கேப்ஷனாக காத்துவாக்குல படம் வெற்றியாக வேண்டும் என வேண்டிக் கொண்டேன், அது பலித்தது. அதற்காக நன்றி சொல்ல வந்திருக்கிறேன் டியர் திருமலையானே என கேப்ஷன் கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

திருமண ஏற்பாடு

திருமண ஏற்பாடு

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்ல மட்டும் இருவரும் தற்போது விசிட் அடிக்கவில்லை என்றும், திருப்பதியில் திருமணத்தை நடத்தும் ஏற்பாடுகளுக்காகத்தான் முக்கியமாக சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவழியாக விக்னேஷ் சிவனது பல ஆண்டு கால வேண்டுதல்களுக்கு மூக்குத்தி அம்மன் வரம் கொடுத்துவிட்டார் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X