மரணம் பெரிய இழப்பு இல்லை.. மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லா போட்ட ட்வீட்டை வைரலாக்கும் நெட்டிசன்கள்

மும்பை: இந்தி சினிமா ரசிகர்களை தாண்டி நாடு முழுவதும் நடிகர் சித்தார்த் சுக்லாவின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Bigg Boss 13 Title Winner திடீர் மரணம் | Sidharth Shukla

பாலிவுட் சினிமா பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலரும் இளம் வயதில் மரணித்த சித்தார்த் சுக்லாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் சுக்லாவின் ரசிகர்கள் 2017ம் ஆண்டு மரணம் குறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டை தற்போது வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் தந்த பிரபலம்

பிக் பாஸ் தந்த பிரபலம்

பாலிகா வது எனும் இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சித்தார்த் சுக்லாவை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சி தான். சல்மான் கான் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற சித்தார்த் சுக்லா அதற்குள் மாரடைப்பால் மரணிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

சித்நாஸ் ரசிகர்கள்

சித்நாஸ் ரசிகர்கள்

சித்தார்த் சுக்லா மற்றும் ஷெனாஸ் கில் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்த நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் சித்நாஸ் ரசிகர்களாக மாறி அவர்களுக்கு ஆர்மியாக இருந்து வந்தனர். சித்தார்த் சுக்லாவின் மரண செய்தியை ஏற்க முடியாமல் ஏகப்பட்ட ரசிகர்கள் சித்தார்த் சுக்லா மற்றும் ஷெனாஸ் கில் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து இந்தியளவில் ஹாஷ்டேக்குகளையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

பாலிவுட் நடிகர்கள் தொடங்கி கோலிவுட் நடிகர்கள் வரை சித்தார்த் சுக்லாவின் மரண செய்தியை அறிந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சல்மான் கான், அக்‌ஷய் குமார், குஷ்பு, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மரணத்தை பற்றி

மரணத்தை பற்றி

சித்தார்த் சுக்லாவின் ரசிகர்கள் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகள், ட்விட்டர் பதிவுகளை தோண்டி எடுத்து அவர் நினைவுகளில் மூழ்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மரணத்தை பற்றி அவர் போட்ட ட்வீட்டை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

மரணம் பெரிய இழப்பு இல்லை

மரணம் பெரிய இழப்பு இல்லை

("Death is not the greatest loss in life .The greatest loss is what dies inside of us while we live.....,") வாழ்வில் மரணம் ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. வாழும் போது நமக்குள் இருக்கும் நல்ல விஷயம் இறப்பது தான் பெரிய இழப்பு என 2017ம் ஆண்டு அவர் பதிவிட்ட ட்வீட்டை வைரலாக்கி அவரது நினைவில் மூழ்கி உள்ளனர்.

என்றும் மனதில்

என்றும் மனதில்

நீங்க பதிவிட்ட ட்வீட் உண்மை தான் சித்தார்த் சுக்லா, என்றும் எங்கள் மனதில் நீங்கள் நீங்காமல் நிறைந்து இருப்பீர்கள் என ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கீழ் தற்போது ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

குவியும் ரசிகர்கள்

குவியும் ரசிகர்கள்

இன்று நடிகர் சித்தார்த் சுக்லாவின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தை நோக்கி ரசிகர்களும் பிரபலங்களும் படையெடுத்து வருகின்றனர். சினிமா துறையில் பெரியளவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சித்தார்த் சுக்லாவுக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X