வரலாறு அஜித்.. விடாமுயற்சி டிரெய்லரில்.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த நபர் யார்?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மொத்தம் 2 நிமிடங்கள் 21 நொடிகள் இடம் பெற்றுள்ள இந்த டிரைலரைப் பார்க்கும்போது, பிரேக் டவுன் படத்தின் தழுவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். டிரைலரில் ஒரு ஷாட்டில் நீளமான முடியுடன் ஒருவர் இருப்பது போல உள்ளது. மேலும் அது அஜித் என இணையவாசிகள் சிலரும் அஜித் இல்லை எனவும் ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

லைகா தயாரிப்பில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படக்குழு தரப்பில் முதலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தினை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லை என படக்குழு தெரிவித்தது.

இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. தற்போது படத்தினை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. குறிப்பாக படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால்தான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விவாதம்: டிரைலரில் ஒரு நிமிடம் 18 நொடிகள் எனும்போது, நீளமான முடியுடன் ஒருவர் கையில் சிகரெட் பிடித்துக் கொண்டு உள்ளார். அவரைப் பார்த்தால் அஜித்போலத் தெரிகின்றது. ஆனால் விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு சில லுக்குகள் இருப்பது டிரைலரைப் பாக்கும்போதே தெரிகின்றது. படத்தின் முக்கியமான கதை நடைபெறும் காட்சிகளில் அஜித்தின் லுக்குகள் மாறுவதில்லை. அதுதான் படத்தின் போஸ்டரில் டீசரில் இப்போது டிரைலரிலும் கூட அதிகமாக உள்ளது.

வரலாறு அஜித்: இப்படியான நிலையில், சிகரெட் பிடித்துக் கொண்டு, நீண்ட முடிகளுடன் இருக்கும் நபர் அஜித் தான் என சிலரும், குறிப்பாக வரலாறு படத்தில் அஜித் இருப்பதைப் போல், இந்த லுக் இருப்பதாக ரசிகர்கள் பேசிக்கொண்டு உள்ளார்கள். மேலும், சிலர், இது அஜித்குமார் இல்லை என்றும், இது வேறு யாரோ என்றும் பேசிக்கொள்கின்றார்கள். இதனால் தனி விவாதமே இணையத்தில் நடந்து வருகின்றது. டிரைலர் வெளியாகி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது, அதற்குள் இந்த டிரைலரை 1.4 மில்லியனுக்கும் மேலானோர் பார்த்துள்ளார்கள். யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











