ஹீரோவான மைக்செட் ஸ்ரீராம்.. ஹீரோயின் மற்றும் படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை: மைக்செட் யூடியூப் சேனலில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த ஸ்ரீராம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நேற்று முன் தினம் ஸ்ரீராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் படக்குழுவுடன் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.
ஒரு பக்கம் பிக் பாஸில் இருந்து சினிமாவுக்கு வந்தால், இன்னொரு பக்கம் யூடியூப் சேனல்களில் இருந்து சினிமாவுக்கு வந்து இளைஞர்கள் அசத்தி வருகின்றனர்.
பரிதாபங்கள் கோபி, சுதாகர் புதிய படத்தில் நடித்து வருவதை போல மைக்செட் ஸ்ரீராமும் ஹீரோவாக சந்தானத்தின் மச்சான் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மைக்செட் ஸ்ரீராம்
மைக்செட் யூடியூப் சேனலில் சோதனைகள் வீடியோக்களை போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த ஸ்ரீராம் கூடிய சீக்கிரமே வெள்ளித்திரையில் ஹீரோவாக ரசிகர்களை என்டர்டெயின் பண்ண காத்திருக்கிறார். யூடியூபில் இருந்து சினிமாவுக்கு ஏகப்பட்ட ஹீரோக்கள், இயக்குநர்கள், காமெடி நடிகர்கள், நடிகைகள் என பலரும் அப்கிரேட் ஆகி வந்துக் கொண்டே இருக்கின்றனர். திறமை இருந்தால் சினிமாவில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதால் பலரும் முயற்சித்து வருகின்றனர்.

சந்தானம் மச்சான்
காமெடி நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் இருவரும் இணைந்து NN பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். அதில், உருவாகும் முதல் படத்தில் ஹீரோவாக மைக்செட் ஸ்ரீராம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பூஜை போட்டு இந்த படம் துவங்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை படக்குழுவுடன் மைக் செட் ஸ்ரீராம் கொண்டாடி உள்ளார்.

ஸ்ரீராம் பர்த்டே
1995ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி பிறந்த மைக்செட் ஸ்ரீராம் பிறந்த நிலையில், கடந்த 16ம் தேதி தனது 28வது பிறந்தநாளை தனது படக்குழுவுடன் ஸ்ரீராம் கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு புது ஹீரோவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இரண்டு ஹீரோயின்
இயக்குநர் விவேக் எழுதி இயக்கி வரும் இந்த படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். அருள்ராஜ் கென்னடி இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன. இந்த படத்தில் மைக்செட் ஸ்ரீராமுக்கு ஜோடியாக மானசா மற்றும் ரிமி என இரண்டு புதுமுக நடிகைகள் நடித்து வருகின்றனர். மைக்செட் ஸ்ரீராமின் பிறந்தநாள் விழாவில் இருவரும் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











