For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஓங்கி அடிச்சா.. ஒன்றரை டன் வெயிட்டுடா.. 10 ஆண்டுகள் ஆனாலும்.. சிங்கம் பவர் மாறல.. தல பாராட்டு வேற!

  |

  சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் #DecadeOfRoaringSINGAM ஹாஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

  Soorarai Pottru- Mannurunda Lyrical video | Surya | G.V.Prakash | Sudha Kongara

  சியான் விக்ரமை காக்கிச்சட்டை போட வைத்து ஆறுசாமியாக மிரட்டி தியேட்டர்களை தெறிக்கவிட்ட இயக்குநர் ஹரி, சூர்யாவுக்கும் அதே காக்கி சட்டையை மாற்றி சிங்கமாக களமிறக்கினார்.

  சூர்யா, அனுஷ்கா, மனோரமா, பிரகாஷ்ராஜ், பிரியா அட்லி, விவேக் நடிப்பில் வெளியான சிங்கம் படம் இன்று டிவியில் போட்டாலும் அதற்கான ஆடியன்ஸே தனி தான்.

  கணவருடன் கட்டிப்புரளும் நடிகை.. பாசம்னா இதுதான்.. பாராட்டும் ரசிகர்கள்!கணவருடன் கட்டிப்புரளும் நடிகை.. பாசம்னா இதுதான்.. பாராட்டும் ரசிகர்கள்!

  சிங்க கர்ஜனை

  சிங்க கர்ஜனை

  காட்டுக்கு ராஜா சிங்கம்னாலே கர்ஜனை தானே. அந்த மேட்டரை பக்காவாக வைத்திருப்பார் இயக்குநர் ஹரி. நடிகர் சூர்யாவோ துரை சிங்கமாகவே கர்ஜித்து நடித்து கலக்கி இருப்பார். தியேட்டர் சண்டை காட்சி ஆகட்டும், பிரகாஷ் ராஜை நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டுவதாகட்டும் என காட்சிகளும் வசனங்களும் தீயாய் தெறிக்கும்.

  எந்திரனுக்கு பிறகு

  எந்திரனுக்கு பிறகு

  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு சுமார் 5 மொழிகளில் வெளியாகி 90 கோடி வசூல் செய்த படம் சிங்கம். அனுஷ்காவுடன் ரொமான்ஸ், ஆடல், பாடல், காமெடி மற்றும் ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் ஐட்டங்களையும் அடுக்கி வைத்து இயக்குநர் ஹரி இந்த படத்தை இயக்கியிருப்பார்.

  நாலு காலு பாய்ச்சலிலே

  நாலு காலு பாய்ச்சலிலே

  நானே இந்திரன்.. நானே சந்திரன்.. பாடலில் முதலில் வரும் ‘நாலு காலு பாய்ச்சலிலே' வரிகளில் படத்தின் ரிலீசின் போது வெளியான போஸ்டரில், எலுமிச்சை மாலை, பூமாலை, கையில் ஆயுதத்துடன் ருத்ரகாளியாக போஸ் கொடுத்து அசத்தியிருப்பார் சூர்யா. இந்த படத்தில் சூர்யா வைத்த கொடுவா மீசை செம டிரெண்ட் ஆனது.

  ஓங்கி அடிச்சா.. ஒன்றரை டன் வெயிட்டுடா..

  ஓங்கி அடிச்சா.. ஒன்றரை டன் வெயிட்டுடா..

  சிங்கத்த போட்டோவுல பார்த்துருப்ப.. சினிமாவுல பார்த்துருப்ப.. டிவியில பார்த்துருப்ப.. ஏன்.. கூண்டுல கூட பார்த்துருப்ப.. கம்பீரமா காட்டுல நடந்து பார்த்துருக்கியா.. வெறித்தனமா தனியா நின்னு வேட்டையாடி பார்த்துருக்கியா.. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பார்க்குறியா என சூர்யா பேசி அடிக்கும் சீன், ரசிகர்கள் நெஞ்சில் அப்படியே பதித்ததும், பலரும் அதனை டப்ஸ்மாஷ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

  இந்தியன் ஜேம்ஸ் பாண்ட்

  இந்தியன் ஜேம்ஸ் பாண்ட்

  சிங்கம் என்பது வெறும் சினிமா பெயர் அல்ல, அது தமிழ் சினிமாவின் அடையாளம் என சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் போல சிங்கம் சீரியஸும் கோலிவுட்டில் கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்தது. சிங்கம் 1, 2 மற்றும் 3 என தொடர்ந்து வெளியான 3 பாகங்களிலும் சூர்யா துரை சிங்கமாக ஓடி ஓடி எதிரிகளை வேட்டையாடி இருப்பார்.

  வேறென்ன வேண்டும்

  வேறென்ன வேண்டும்

  சிங்கம் படத்தை பார்த்த பல போலீஸ்காரர்களும், மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, அந்த படத்தையும் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் வெகுவாக பாராட்டித் தள்ளினார்கள். போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்றால் கூட பல இடங்களில் சிங்கம் சூர்யாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

  சிங்கம் சூர்யாவை பாரட்டிய தோனி

  சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கை பார்த்தே தனக்கு பிடித்துப் போனதாகவும், தன்னிடம் சிலர், இதன் ஒரிஜினல் வெர்ஷன் தமிழ் படம் என்று கூற, சப் டைட்டிலுடன் சிங்கம் படத்தை பார்த்தேன். சூர்யாவின் நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. நிச்சயம் நானும் சூர்யா ஃபேன் தான் என சிங்கம் படம் குறித்தும் சூர்யா பற்றியும் தல தோனி பேசிய வீடியோவையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

  English summary
  Suriya’s magnum opus cop movie Singam completes its 10th year release anniversary today. Suriya fans goes craze in twitter and trending #DecadeOfRoaringSINGAM.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X