ரஜினிக்காக மட்டுமே பக்கா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்: நிக்கி கல்ராணி
Recommended Video

சென்னை: ரஜினிகாந்துக்காக மட்டுமே பக்கா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
புதுமுகம் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, ஆனந்த்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பக்கா. இந்த படத்தை தயாரித்துள்ள டி. சிவக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

விக்ரம் பிரபு
முதல் முறையாக பக்கா படத்தில் விக்ரம் பிரபு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவர் தோனி ரசிகராக நடித்துள்ளார். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கூட தோனிகுமார்.

ரஜினிகாந்த்
பக்கா படத்தில் நிக்கி கல்ராணி ரஜினிகாந்தின் தீவிர வெறியையாக நடித்துள்ளார். ரஜினிகாந்துக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நிக்கி தெரிவித்துள்ளார்.

நிஜத்திலும்
ரஜினி ரசிகையாக நடிப்பது எனக்கு புதிதாக உள்ளது. படத்தில் மட்டும் அல்ல நான் நிஜத்திலும் ரஜினியின் தீவிர ரசிகை. நான் விக்ரம் பிரபுவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன் என்கிறார் நிக்கி.

முயற்சி
பக்கா படம் பக்காவான காமடெி படம். இந்த படம் மூலம் விக்ரம் பிரபு காமெடி பண்ண முயற்சி செய்துள்ளார். இரட்டை வேடம், காமெடி என்று இரு விஷயங்களை கையில் எடுத்துள்ளார் விக்ரம் பிரபு.


Click it and Unblock the Notifications











