போதை பொருள் பயன்படுத்திய வழக்கு.. ஆஜராகாமல் போக்கு காட்டும் நடிகை.. பிடிவாரண்ட் பிறப்பிக்க முடிவு!
சென்னை: தெலுங்கு சினிமாவில் குணசித்திர நடிகையாவும் நகைச்சுவையாகவும் உள்ள நடிகை ஹேமா, ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்டு போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகாமல் போக்கு காட்டி வருவதால், பிடிவாரண்ட் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த மாதம் 19ந் தேதி ரேவ் பார்ட்டி நடைபெற்றது. அந்த பார்ட்டியில் 101 பேர் கலந்து கொண்டனர். அந்த விருந்தில் போதை பொருட்களை பயன்படுத்தியது பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த போதை பொருள் வியாபாரி வாசு உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து, அந்த விருந்தில் கலந்து கொண்ட 101 பேரில், நடிகை ஹேமா உள்பட 88 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நடிகை ஹேமா: ஆனால், நடிகை ஹேமா நான் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், போதை பொருளை பயன்படுத்தவில்லை என்றும் விளக்கம் கொடுத்து இருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 86 பேரிடம் சிறுநீர் பரிசோதனை செய்தோம், அதில் பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
விசாரணைக்கு ஆஜராகவில்லை: இதையடுத்து, நடிகை ஹேமா உட்பட 8 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால், நடிகை ஹேமா உடல் நலக்குறைவால், தன்னால் ஒரு வாரம் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், கால அவகாசம் வழங்கும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 1ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு 2வது முறையாக போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ஹேமா உள்பட 8 பேரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராகாமல் போக்கு காட்டி வரும் நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கும் எதிராக கைது வாரண்டு பிறப்பிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











