'கே.ஜி.எஃப்' ஹீரோ யஷ் மகனுக்கு பெயர் சூட்டியாச்சு.. இதுதான் பெயர்.. என்ன அர்த்தம்னு பாருங்க!
சென்னை: கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் மகன் பெயர் சூட்டு விழா எளிமையாக நடந்துள்ளது.
Recommended Video
பிரபல கன்னட ஹீரோ யஷ். இவர், கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானார்.
இந்தப் படம், கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இரண்டாம் பாகம்
படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இதையும் இயக்குகிறார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ராதிகா பண்டிட்
முதல் பாகத்தைப் போல, இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் யஷ்சின் மனைவி ராதிகா பண்டிட். இவர் கன்னட நடிகை. இருவரும் 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி' என்ற கன்னடப் படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர்.

மகன் புகைப்படம்
சில வருடங்களாகக் காதலித்த அவர்கள், 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அயிரா என்ற மகள் இருக்கிறார். கடந்த வரும் அக்டோபர் மாதம் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனின் புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள், அவர்களின் சமூகவலைத்தள கணக்கில் கோரிக்கை வைத்தபடி இருந்தனர்.

ஜூனியர் ராக்கி
இதையடுத்து யஷ்ஷும் ராதிகா பண்டிட்டும் தங்கள் மகனின் போட்டோவை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர். 'என் செல்ல மகனுக்கு உங்கள் அன்பையும் ஆசியையும் கொடுங்கள்' என்று தெரிவித்திருந்தார், யஷ். இதையடுத்து சில ரசிகர்கள், ஜூனியர் ராக்கி பாய் என்றும் கே.ஜி.எஃப் சாப்டர் 25 படத்தின் ஹீரோ என்றும் அவர் மகனை வர்ணித்திருந்தனர்.

யாதர்வ் யஷ்
இந்நிலையில் அவர்கள் தங்கள் மகனுக்கு யாதர்வ் யஷ் (Yatharv) என்று பெயர் வைத்துள்ளனர். எளிமையாக நடந்த விழாவில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு பாடல் ஒன்றை இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் உருவாக்கி இருக்கிறார். சந்தோஷ் வெங்கி பாடியுள்ள இந்த பாடலுடன் விழாவை வீடியோவாக வெளியிட்டுள்ளார், நடிகர் யஷ்.

முழுமையானவன்
யாதர்வ் என்ற பெயருக்கு முழுமையானவன் என்று அர்த்தமாம். Yash, Radhika விலிருந்து Y,R, மற்றும் மகள் AYRA ஆகிய வார்த்தைகளின் கலவையாக இந்த பெயரை உருவாக்கினோம் என்று கூறியுள்ளார் யஷ். இதையடுத்து ரசிகர்கள், பெயர் சூப்பர் என்றும் ஜூனியர் யஷ்சுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











