சுடுகாடு பக்கத்தில் வீடு.. எல்லோரும் திட்டினாங்க.. நாங்க கோவிலாகதான் பார்க்கிறோம்.. நடிகை தீபா

சென்னை: வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை தீபா. இவரது வெள்ளந்தியான வெகுளியான பேச்சு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வருகிறது. நகைச்சுவை கலந்த நடிப்பு, எமோஷனல் கலந்த நடிப்பு என தீபா தமிழ் சினிமாவில் இன்னும் அலங்கரிக்கப்பட வேண்டிய குணச்சித்திர நடிகைகளின் ஒருவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தனது வீட்டை சுடுகாட்டுக்கு பக்கத்தில் கட்டும்போது, உறவினர்கள் நண்பர்கள் என பலரும் சுடுகாட்டுக்கு பக்கத்தில் என் வீட்டை கட்டுறீங்க, அங்கெல்லாம் கட்டாதீங்க, நல்லபடியா தூங்க முடியாது, எப்பவுமே பிணத்தை எரிக்கின்ற வாடை அடித்துக் கொண்டே இருக்கும், நிம்மதியாகவே இருக்க முடியாது, குடும்பத்தில் அமைதி இருக்காது என ஏதேதோ காரணங்கள் எல்லாம் கூறியுள்ளனர். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தீபாவும் அவர்கள் குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு பக்கத்தில் வாங்கிய நிலத்தில் முதன் முதலில் வீட்டை கட்டினோம்.

Deepa Reveals She Built Her Home Near a Cremation Ground I Worship It Like a Temple

கோவிலாக நினைக்கிறேன்: அப்படி கட்டும் போது பலரும் வேண்டாம் என்று என்னை தடுத்தனர் சிலர் எதிர்த்தனர். நான் அந்த சுடுகாட்டை கோவிலாக நினைத்து வணங்கி வருகிறேன். இன்றைக்கு எனது வீடு, மாடி வீடாக மாறிவிட்டது. காரணம் நான் அந்த சுடுகாட்டை கோவிலாக நினைத்து வழிபட்டதும், மிக முக்கியமான காரணம் தான் என்று தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் ஆதரவு: தீபாவின் இந்த பேச்சு பலர் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சில இணையவாசிகள் சுடுகாட்டுக்கு பக்கத்துல நிலத்தை வாங்கி அங்கு வீட்டைக் கட்டி வாழ்வதற்கு எல்லாம் தனி தைரியம் வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் சில இணையவாசிகள் நகர்ப்புறங்களில் நெருக்கமான சூழல்களில் சுடுகாட்டுக்கு அருகிலேயே தான் குடியிருப்புகளும் இருந்து வருகின்றன. அந்த மக்கள் எல்லாம் நன்றாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் சுடுகாட்டை எப்படி நீங்கள் குறை கூற முடியும். சுடுகாடு இல்லை என்றால் இறந்து போன மனிதர்களை நாம் என்ன செய்ய முடியும்? சுடுகாடும் நமது வாழ்வில் ஒரு அங்கம் தான், அதையும் என்றாவது ஒரு நாள் எல்லோரும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தீபாவின் கருத்துக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.

Deepa Reveals She Built Her Home Near a Cremation Ground I Worship It Like a Temple

எமோஷனல்: நடிகை தீபா சினிமாக்கள், விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்கள், என பலவற்றிலும் கலந்து கொண்டு தனது வெகுளியான பேச்சால் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்தவர். ஒரு விருது நிகழ்ச்சியில் பேசும்போது, நானும் எனது குடும்பத்தினரும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு காரணமே நன்றாக சாப்பிட்டுவிட்டு போவதற்காக தான் என்றெல்லாம் அழுது கொண்டே கூறியது பலரது மனதையும் தொட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X