எவ்வளவோ கஷ்டங்கள்.. பிக்பாஸ் 8ல் தீபக் எமோஷனல் பேச்சு.. என்ன செய்யப்போறாரோ?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கின்றனர். முதல் ஆளாக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதனையடுத்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா சென்றார். தீபக் ஐந்தாவது ஆளாக உள்ளே சென்றிருக்கிறார். வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு தீபக் நெகிழ்ச்சியோடு பேசினார்.
கமல் ஹாசன் இதுவரை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். வழக்கம்போல் இதிலும் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கின்றனர். திரையுலக பிரபலம், சின்னத்திரை பிரபலம், யூட்யூப் பிரபலம் என கலவையாக இந்தப் போட்டியாளர்கள் லிஸ்ட்டை பிக்பாஸ் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனால் இந்த சீசனிலும் பரபரப்புக்கும், பிரச்னைக்கும் பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

யார் யார் போட்டியாளர்கள்: இந்த சீசனைப் பொறுத்தவரை ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாந்த், நடிகர் தீபக், கானா பாடகர் பால் டப்பா, கோகுல்நாத், நடிகர் விஜே விஷால், நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி மீது எதிர்பார்ப்பு: கமல் ஹாசனைப் பொறுத்தவரை ஆறு சீசன்களாக அவரது தொகுப்பாளர் பணியில் யாரும் பெரிதாக குறை சொல்லவில்லை. ஆனால் கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி விஷயத்தில் கமல் ஹாசனை ரொம்பவே வறுத்தெடுத்துவிட்டார்கள் ரசிகர்கள். இதனால் ஆண்டவரும் கொஞ்சம் அப்செட் என்றும்; அதனால்தான் கமல் ஹாசன் பிக்பாஸிலிருந்து வெளியேறினார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்த சூழலில்தான் விஜய் சேதுபதி உள்ளே வந்திருக்கிறார்.
கமல் ஹாசன் போல் எந்தவிதமான விமர்சனத்தையும் தான் சந்தித்துவிடக்கூடாது என்பதில் சேது உறுதியாக இருக்கிறார். முதல் நாள் தொகுத்து வழங்கும் விதத்திலேயே தான் வேறுவிதமான ஆள் என்பதை உணர்த்தியிருக்கிறார். இதுஒருபக்கம் இருக்க வீட்டுக்குள் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமாக வீட்டுக்குள் இருக்கும் கோடு எதற்காக என்றும் அதை வைத்து என்னென்ன ட்விஸ்ட்டை பிக்பாஸ் கொடுக்கப்போகிறாரோ என்று ரசிகர்கள் இப்போதே ஆவலோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தீபக் பேச்சு: இந்நிலையில் பிக்பாஸ் 8ல் ஐந்தாவது போட்டியாளராக வீட்டுக்குள் சென்ற தீபக் பேசுகையில், " ஆங்கரிங் எனக்கு ஜாலியாக இருந்தது. டிடியோடுதான் தொகுப்பாளர் பயணத்தை நான் ஸ்டார்ட் செய்தேன். ஜோடி நம்பர் 1க்கு நாங்கள் சேர்ந்து செய்தோம். 2006லிருந்து நடிகராக வேண்டும் என்ற ஆசை அதிகம் தோன்றியது. இருக்கும் போட்டியில் எல்லோருமே ஒன்றுதான். இன்றைய மார்க்கெட்டில் ஃபேமஸாக இருப்பவர்களுக்கு சோஷியல் மீடியா நிறையவே உதவியிருக்கிறது.
சீரியல்களில் கம்ஃபோர்ட் சோனுக்குள் செட் ஆகிவிடுவோம். நம்மை ஒரு கேரக்டராக, ஆக்டராக மக்கள் பார்ப்பது தவிர்த்து தீபக்காக பார்க்க வேண்டும். அப்படித்தான் நான் இருக்க வேண்டும் என நினைப்பேன். அந்த கேரக்டர்தான் எனக்கு உதவப்போகிறது. இந்த நிகழ்ச்சிக்காக பலர் காத்திருந்தார்கள். நானும் அப்படித்தான் காத்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு எனது மகன் மட்டும்தான் காரணம். எனது நண்பர்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன். நான் கலக்கிவிட்டு வருகிறேன் அம்மா" என்று உறுதி கூறினார்.


Click it and Unblock the Notifications











