இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் ஹீரோவான தீபக்

By Mayura Akilan

சின்னத்திரையின் ரொமான்ஸ் ஹீரோ தீபக். சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவனுக்குத் தண்ணியில கண்டம் இதுதான் தீபக் நடிக்கும் படத்தில் பெயர்.

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிவரும் தென்றல் தொடரின் ஹீரோவான தீபக்கடந்த சில மாதங்களாகவே அதிகம் தென்படவில்லை. காரணம் என்னவென்று விசாரித்தால் சத்தமில்லாமல் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்கின்றனர் சின்னத்திரை வட்டாரங்களில்

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரை டூ சினிமா

சந்தானம், நண்டு ஜெகன், சிவகார்த்திக்கேயன், மாகாபா ஆனந்த் வரிசையில் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு பயணமாகிறார் தீபக்.

விசில் படத்தில்

விசில் படத்தில்

இவர் ஏற்கனவே விசில் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றாலும் இம்முறை ஹீரோவாக களமிறங்குகிறார்.

காமெடி த்ரில்லர் படம்

காமெடி த்ரில்லர் படம்

படத்தின் பெயர் இவனுக்கு தண்ணியில கண்டம். . எஸ்.எஸ்.சக்திவேல் இயக்கும் இந்தப் படம் காமெடி த்ரில்லர் படம்.

நண்பரின் தயாரிப்பில்

நண்பரின் தயாரிப்பில்

தீபக்கின் நண்பர் வெங்கட்ராஜ் தயாரிக்கிறார். 7 பேர் இசை அமைக்கிறார்கள். "நண்பர் வெங்கட்ராஜால் கிடைத்த வாய்ப்பு இது. இது நண்பர்கள் இணைந்து இந்த நண்பனுக்காக உருவாக்குற படம். நிச்சயம் ஜெயிக்கும்ங்ற நம்பிக்கை இருக்கு" என்கிறார் தீபக்.

தென்றல் தொடருக்கு லீவ்

தென்றல் தொடருக்கு லீவ்

முதல் படத்திலேயே காமெடி ஹீரோவாக அறிமுகமாகிறேன். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் தென்றல் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்று இல்லத்தரசிகளுக்கு தகவல் கூறுகிறார் தீபக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X