திரைப்பிரபலங்கள் கொண்டாடிய தீபாவளி கொண்டாட்டம்..லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்!

சென்னை: திருமணமான தம்பதிகள் தங்களது முதல் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடுவார்கள். அப்படி இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த பிரபலங்கள் சிலர் தல தீபாவளி கொண்டாடினார்கள்.

அவர்கள் மட்டுமில்லாமல் பல திரை நட்சத்திரங்களும் குடும்பத்துடன் போட்டோவை வெளியிட்டு தங்களது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தின் தொகுப்பினை பார்க்கலாம்.

Deepavali celebration photos of celebrities trending on social media

ஹன்சிகா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி தனது நண்பரும் பிஸ்னஸ் பார்ட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த தீபாவளி தலை தீபாவளியாகும்.

Deepavali celebration photos of celebrities trending on social media

தல தீபாவளி க்ளிக்ஸ்: அருண் பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று அவர்கள் தங்களின் தல தீபாவளியை கொண்டாடினார்கள். இவர்களின் தல தீபாவளி கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Deepavali celebration photos of celebrities trending on social media

மஹத், பிராச்சி: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் பிரபலமான மகத், அதன், பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். நடிகர் மஹத், பிராச்சி மற்றும் அதியமானுடன் தீபாவளி கொண்டாடிய போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Deepavali celebration photos of celebrities trending on social media

விஷ்ணு விஷால்: வளர்ந்து வரும் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், தனது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் மகன் ஆர்யனுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Deepavali celebration photos of celebrities trending on social media

யோகி பாபு: தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான காமெடி சென்ஸ் மூலம், மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான காமெடி நடிகரான யோகி பாபு, 2020ம்ஆண்டு பார்கவி என்கிற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு விசாகன் என்கிற மகன் இருந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த தீபாவளிக்கு தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

Deepavali celebration photos of celebrities trending on social media

ஸ்ருதி ஹாசன் காதலன்: நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது காதலனுடன் பட்டுபுடவை கட்டிக்கொண்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Deepavali celebration photos of celebrities trending on social media

ஷிவானி நாராயணன்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சினிமா நடிகையுமான ஷிவானி நாராயணன் தீபாவளிக்கு அழகான உடையில் ஜொலித்து தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

Deepavali celebration photos of celebrities trending on social media

க்யூட்டான வாழ்த்து: நடிகை ஐஸ்வர்யா மேனன், தீபாவளியை சிறப்பிக்கும் விதமாக, பச்சை நிற பட்டு புடவையில் தன்னுடைய பளபளக்கும் அழகை வெளிப்படுத்தி தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த போட்டோ வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X