மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் !

சென்னை : தமிழ் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா என பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கி உள்ள மாஸ்டர் படத்துடன் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றிய செய்திகள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்தியில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகரின் படமும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.

பாகுபாடு இன்றி

பாகுபாடு இன்றி

இந்தியாவில் முக்கியமான பண்டிகைகளில் அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் எந்த ஒரு பாகுபாடுமின்றி கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இவ்வாறு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில் புது படங்கள் ரிலீசாகாமல் தீபாவளி நிறைவு பெறுவதில்லை.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

அந்தவகையில் ஒவ்வொரு தீபாவளிக்கும் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திருவிழா போல தியேட்டர்கள் காட்சி அளித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. சென்ற ஆண்டு தமிழில் பிகில் மற்றும் கைதி தீபாவளிக்கு ரிலீசாகி இரண்டு படங்களும் சக்கைப்போடு போட்டு ரசிகர்கள் அனைவரையும் திருப்தி படுத்திய நிலையில் இந்த ஆண்டு எந்தெந்த படங்கள் ரிலீசாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரேஸில் இணைந்துள்ளது

ரேஸில் இணைந்துள்ளது

தளபதி விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என சொல்லப்பட்டு வரும் வேளையில் தற்பொழுது மற்றொரு முன்னணி நடிகரின் படமும் இந்த தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.

குட் நியூஸ்

குட் நியூஸ்

இந்தியில் உச்ச நடிகராக வலம் வரும் அக்சய் குமார் நடிப்பில் சமீபத்தில் குட் நியூஸ் என்ற திரைப்படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது. இரண்டு தம்பதிகளுக்கு இடையே நடக்கும் கதையில் முற்றிலும் காமெடிகளை புகுத்தி அனைவரையும் படம் முடியும் வரையிலும் ரசிக்க வைத்தது.

அக்சய்குமார் போலீசாக

அக்சய்குமார் போலீசாக

இந்த படத்தை தொடர்ந்து தற்போது அக்சய்குமார் நடித்து வரும் படம் சூர்யவன்ஷி. இந்தப் படத்தை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்க கரண் ஜோகர் இணைந்து தயாரித்துள்ளார். அக்சய்குமார் போலீசாக நடிக்க இதில் கேத்தரினா கைஃப், ரன்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கான் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

தடை செய்ய வேண்டும்

தடை செய்ய வேண்டும்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சுஷாந்த் சிங்கின் மரணம் காரணமாக கரண் ஜோகர் தயாரிக்கும் படங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு குரல்கள் எழுந்து வந்த நிலையில் தற்பொழுது இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

அதிக எதிர்பார்ப்பை

அதிக எதிர்பார்ப்பை

ஏற்கனவே தமிழில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது அக்சய்குமார் நடிப்பில் இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூர்யவன்ஷி திரைப்படமும் தற்போது தீபாவளி ரேஸில் கலந்து கொண்டுள்ளது.

தீபாவளி பந்தயத்தில்

தீபாவளி பந்தயத்தில்

மேலும் மாஸ்டர் மற்றும் சூர்யவன்ஷி படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருவா திரைப்படமும் இந்த தீபாவளி பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிகுந்த ஆவலுடன்

மிகுந்த ஆவலுடன்

இவ்வாறு சென்ற ஆண்டு இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த தமிழ் சினிமா இந்த தீபாவளிக்கு தமிழில் மாஸ்டர் படமும் ஹிந்தியில் சூர்யவன்ஷி படமும் வெளியாகும் என தெரிவித்து வரும் நிலையில் அருவா திரைப்படமும் வெளியாக வேண்டும் என சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X