வோக் பேஷன்ஸ் நைட் அவுட் நிகழ்ச்சிக்கு 'எஃப்.எஃப்' ஹீரோவுடன் வந்த தீபிகா படுகோனே
மும்பை: மும்பையில் நடந்த வோக் ஃபேஷன்ஸ் நைட் அவுட் 2014 நிகழ்ச்சியில் நடிகைகள் தீபிகா படுகோனே, சோனம் கபூர், நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மும்பையில் உள்ள பலாடியம் ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு வோக் ஃபேஷன்ஸ் நைட் அவுட் 2014 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு தீபிகா படுகோனே யாருடன் வந்திருந்தார் தெரியுமா?

தீபிகா
தீபிகா படுகோனே விழாவுக்கு அர்ஜுன் கபூருடன் வந்திருந்தார். அவர்கள் நடித்துள்ள ஃபைன்டிங் ஃபேனி(எஃப்.எஃப்) படம் ரிலீஸுக்கு காத்துள்ளது.

கோபம்
ஃபைன்டிங் ஃபேனியில் தீபிகா அர்ஜுனிடம் நான் ஒரு கன்னித்தன்மை கலையாத பெண் என்று கூறும் காட்சி உள்ளது. அந்த காட்சியில் வரும் கன்னித்தன்மை வார்த்தையை நீக்கவில்லை என்றால் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது தீபிகா மற்றும் அர்ஜுனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனம்
வோக்ஸ் நைட் அவுட்டுக்கு நடிகை சோனம் கபூர் வந்திருந்தார். வழக்கம் போன்று டிசைனர் ஆடையில் வந்திருந்தார்.

நேஹா தூபியா
விழாவுக்கு நடிகையும், மாடலுமான நேஹா தூபியாவும் வந்திருந்தார். ஹேர்ஸ்டைலை மாத்தியிருக்கலாம் நேஹா.

ஃபைன்டிங் ஃபேனி குழு
வோக்ஸ் நிகழ்ச்சியில் ஃபைன்டிங் ஃபேனி இயக்குனர் ஹோமி அதாஜானியா தனது ஹீரோ அர்ஜுன், ஹீரோயின் தீபிகாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











