ராவணனாக ஹிருத்திக் ரோஷன்....சீதையாக தீபிகா படுகோனே...அப்போ ராமர் யாரு ?
மும்பை : இந்தியில் ராமாயணம் படம் 3 டி வடிவில் தயாரிக்கப்பட உள்ளது. இதில் ஹிரித்திக் ரோஷனும், தீபிகா படுகோனேவும் நடிக்கிறார்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது தான்.
இந்த படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவர் தான் ராமர் வேடத்தில் நடிக்க போகிறார் என முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் அந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ராவணன் வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், சீதை வேடத்தில் தீபிகாவும் நடிக்கிறார்கள். ராமன் வேடத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ராமர் வேடத்தில் பிரபாசை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால் இப்படத்தின் வேலைகள் தொடர்ந்து தள்ளிப் போவதால், பிரபாஸ் இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு படமான ஆதிபுருஷ் படத்திலும் அவர் ராமர் வேடத்தில் தான் நடிக்கிறார். இப்படத்தில் ராவணனாக சைப் அலி கான் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டரும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.
இதே போன்று தீபிகாவும், ஹிருத்திக் ரோஷனும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு ஹிருத்திக்கின் பிறந்தநாளன்று வெளியிடப்பட உள்ளது.
ஃபைட்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, ஹிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் ஹிட் படங்களான பேங் பேங், வார் படங்களை இயக்கிய டைரக்டர் சித்தார்த் ஆனந்த் தான் இயக்க போகிறார். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











