தீபிகாவுக்கு யானைப்பசி: கிண்டலடிக்கும் ஷாரூக்

மும்பை: தீபிகா படுகோனே அதிகமாக சாப்பிடுவதே அவரது ஒல்லி உடம்பின் ரகசியம் என ஷாரூக்கான் கிண்டலடித்துள்ளார்.

ஷாரூக்கனும், தீபிகா படுகோனேயும் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது தான், ஷாரூக்கான் இவ்வாறு 'தீபிகாவிற்கு யானைப்பசி' எனக் கிண்டல் அடித்துள்ளார்.

முதல் படமே ஷாரூக்குடன் தான்...

முதல் படமே ஷாரூக்குடன் தான்...

தீபிகாவை தனது ‘ஓம் சாந்தி ஓம்' படம் மூலம் அறிமுகப் படுத்தியவரே ஷாரூக் தான். முதல் படத்திலேயே புகழின் உச்சியில் அமர்ந்தார் தீபிகா.

சென்னை எக்ஸ்பிரஸ்...

சென்னை எக்ஸ்பிரஸ்...

தற்போது, இருவரும் இணைந்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் நடித்துள்ளனர். கதைப்படி தீபிகா தமிழ்ப் பெண். இருவருக்கும் இடையே உண்டாகும் காதல், அதனால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவர்றைச் சுற்றியே கதைக்களம் பின்னப்பட்டுள்ளது.

டயட் ரகசியம்...

டயட் ரகசியம்...

சமீபத்தில் ஷாரூக், தீபிகா மற்றும் படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்ட ‘சென்னை என்ஸ்பிரஸ்' விளம்பர நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது, காமெடி நடிகரான அபில் சர்மா கேட்ட கேள்விக்குத் தான் ஷாரூக் அவ்வாறு கிண்டலாக பதில் சொல்லி உள்ளார். அதாவது, மாடலாக இருந்து நடிகையாக உயர்ந்துள்ள உங்கள் ஸ்லிம் உடலின் ரகசியம் என்ன? என்பது தான் அந்தக் கேள்வி.

ஷாரூக் சொல்வார்...

ஷாரூக் சொல்வார்...

புன்னகையோடு ஷாரூக் பக்கம் திரும்பிய தீபிகா, ‘அதப் பத்தி ஷாரூக் கிட்ட கேளுங்களேன்' எனக் கூறினார். முதலில் மறுத்த ஷாரூக் பின் தீபிகாவின் டயட்டைப் போட்டுடைத்தார்.

யானைப்பசி...

யானைப்பசி...

அதில், தீபிகாவிற்கு எப்போதுமே யானைப் பசிதான். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது உணவை உள்ளே தள்ளிக் கொண்டே இருப்பார். மலைகளில் ஷூட்டிங் நடக்கும் சமயங்களில் நாங்கள் அனைவரும் வெறும் பிஸ்கட்டும், டீயும் மட்டுமே சாப்பிடுவோம். காரணம், மற்ற உணவுகளை எங்களுக்கு முன்னதாக தீபிகா சாப்பிட்டு முடித்திருப்பார்' என்றார் கிண்டலாக.

அப்படியே சாப்பிடுவாராம்...

அப்படியே சாப்பிடுவாராம்...

மேலும், தீபிகாவால் பசியை அடக்க முடியாதாம். சில சமயங்களில் செட்டில் உள்ள எல்லாரது உணவுகளையும் கூட சாப்பிட்டு விடுவார்' எனத் தெரிவித்துள்ளார் ஷாரூக்.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி...

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி...

இவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டு புன்னகை புரிந்து கொண்டிருந்தாராம் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியான தீபிகா படுகோனே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X