ரேஸ் 2வை தீபிகா நடித்து முடித்தேயாக வேண்டும்: இந்தித் தயாரிப்பாளர் பிடிவாதம்

என்ன ஆனாலும் சரி தீபிகா படுகோனே திட்டமிட்டபடி என் படத்தை நடித்து முடித்துக் கொடுத்தே தீர வேண்டும் என்று தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரஜினிகாந்தின் கோச்சடையானில் நடிப்பதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 இந்தி படத்தில் இருந்து வெளியேறினார். இது குறித்து கேட்ட தயாரிப்பாளர் ரமேஷுக்கு அவர் தனது மேனேஜர் மூலம் பதில் தெரிவித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் செய்வதறியாது உள்ளார். இருப்பினும் தனது படத்தில் தீபிகா நடித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரமேஷ் கூறியதாவது,
2011ம் ஆண்டு நவம்பரில் துவங்கி 2012ம் ஆண்டு பிப்ரவரியில் ரேஸ் 2 படத்தை முடிப்பது என்று திட்டமிட்டோம். கடந்த செப்டம்பர் மாதம் தீபிகா ரன்பீர் கபூருடன் ஜோடி சேர கரண் ஜோஹார் படத்துக்கு செல்ல முயற்சிக்கின்றார் என்று பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொண்டோம். இதையடுத்து கரணுடன் பேசி அவர் 2 படங்களிலும் நடிக்கின்ற மாதிரி ஏற்பாடு செய்தேன்.
தீபிகா வசதிக்காக ரேஸ் 2 ஷூட்டிங்கை நவம்பரில் 10 நாட்கள், பிப்ரவரியில் 15 நாட்கள், மே, ஜூனில் 45 நாட்கள் நடத்த முடிவு செய்தோம். அவரது கால்ஷீட்டை 4 மாதங்கள் நான் வீணடித்ததாகக் கூறுவதெல்லாம் சுத்த பொய். அவர் தேசி பாய்ஸ் மற்றும் காக்டெய்ல் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி தீபிகாவின் மேனேஜர் அனிர்பன் எங்களிடம் வந்து அவருக்கு பெரிய ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரேஸ் 2 படத்தில் இருந்து விலகுவதாகவும் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடு கொடுப்பதாகவும் தெரிவித்தார். பிப்ரவரி 10 மற்றும் 11ல் அவர் ரேஸ் 2 ஷுட்டிங்கிற்கு வர வேண்டும். ஆனால் அவர் கோவாவில் நடக்கும் ரோஹித் தவான் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றார். நானும் சரி என்றேன்.
அடுத்தடுத்து அவமதித்தார் தீபிகா
கடந்த 27ம் தேதி தீபிகா என்னை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மேனேஜரை அனுப்பினார். ஜனவரி 27 முதல் 31ம் தேதி வரை மும்பையில் இருந்து கொண்டே நான் போன் செய்தபோதெல்லாம் எடுக்கவில்லை. எனது 25 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் என்னை யாரும் இந்த அளவுக்கு அவமதித்ததில்லை.
கடந்த 31ம் தேதி இரவு 10 மணிக்கு தான் அமெரிக்கா செல்ல விமானத்தில் இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பினார். திரும்பி வந்த பிறகு கடந்த 6ம் தேதி காக்டெய்ல் ஷுட்டிங்கில் வைத்து அவரை சந்திக்க விரும்பினேன். ஆனால் அவர் 3 நாட்கள் கழித்து பார்க்கலாம் என்றார். வேறு வழியில்லாதததால் இயக்குனர்கள் அப்பாஸ், மஸ்தான் ஆகியோரை அழைத்துக் கொண்டு காக்டெய்ல் ஷுட்டிங்கில் அவரை சந்தித்தேன்.
ஆனால் அவரோ படத்தை விட்டு பாதியில் வெளியேறியதும் இல்லாமல், முறையாக பதில் அளிக்கவில்லை. அதனால் தான் நான் அவர் மீது சிஐஎன்டிஏஏ மற்றும் ஏஎம்பிடிபிபியில் புகார் கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்றார்.


Click it and Unblock the Notifications











