இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க 'தில்' வேண்டும்: தீபிகாவுக்கு குவியும் பாராட்டுக்கள்
மும்பை: எந்த நடிகையும் நடிக்க யோசிக்கும் கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்கும் தீபிகா படுகோனேவை பலரும் பாராட்டியுள்ளனர்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை சபாக் என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக எடுக்கிறார்கள். மேக்னா குல்சார் இயக்கும் இந்த படத்தில் லக்ஷ்மியாக நடிக்கிறார் தீபிகா படுகோனே.
சபாக் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தீபிகாவின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகாவுக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்களால் தீபிகாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தீபிகா
தீபிகா படுகோனே சபாக் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் மாலதி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், படத்தை தயாரிப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும்.
ஆதரவு
சபாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி இதற்கு தன் அமோக ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார். ரங்கோலி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசம்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை படமாக்குவதை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











