குட்டி இளவரசி வந்தாச்சு..ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியை வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!
மும்பை: நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை மலைக்கா அரோரா, அனன்யா பாண்டே, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் என ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனே, தமிழில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தீபிகா அனிமேஷனில் இருந்ததால், அது பெரிதாக எடுபடவில்லை. ஆனால், இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தமிழ் ஆடியன்ஸ் வெகுவாக பார்த்து ரசித்தனர்.

நடிகை தீபிகா படுகோனே: தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் தீபிகா படுகோனே, ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் தீபிகாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஆனது. இதைத்தொடர்ந்து அண்மையில் வெளியா கல்கி திரைப்படமும் வசூலை அள்ளியது.
பெண் குழந்தை பிறந்தது: கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை தீபிகா அறிவித்தார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து, நேற்று மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் தீபிகா அனுமதிக்கப்பட்டதை அடுத்து, இன்று தீபிகாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குவியும் வாழ்த்து: இந்த தகவலை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலகநட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் கபூர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, "லக்ஷ்மி வந்தாச்சு, வீட்டின் ராணி என பதிவிட்டு, இதய ஈமோஜிக்களுடன் தம்பதியினரை வாழ்த்தினார், அதேபோல நடிகைகள் மலைக்கா அரோரா, அனன்யா பாண்டே, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
குட்டி இளவரசி: நீல் நிதின் முகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் மற்றும் குட்டி இளவரசிக்கு என் ஆசீர்வாதம் என்று பதிவிட்டுள்ளார். கரண்வீர் போஹ்ரா, இந்த நாள் தம்பதியரின் சிறப்பான நாள், அவர்களுக்கு மறக்கமுடியாத நாளாக மாறி உள்ளது என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











